Detailed Description
சரியாகச் சொல்ல வேண்டுமானால், எந்த முஸ்லிமும் ஸலஃபை நிராகரிக்க முடியாது. அதாவது, நபித்தோழர்கள் எனும் ஸலஃபை நிராகரித்துவிட்டு இஸ்லாமை அறியவே முடியாது. இங்கிருந்தே ஸலஃபுகளின் கொள்கையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஸலஃப் என்றால் முன்சென்றவர்கள். இஸ்லாமில் முன்சென்ற முன்னோடிகளான நபித்தோழர்கள்தான் நமக்கு ஸலஃப். திருக்குர்ஆனையும் நபிவழியையும் உறுதியாகப் பின்பற்றிய அவர்கள் வழியாகத்தான் முழு மனித சமுதாயமும் இஸ்லாமியத் தூதுச் செய்தியைப் பெற்றுக்கொண்டது. இங்கு விவகாரம் என்னவெனில், அவர்கள் புரிந்தது போலத்தான் நாமும் புரிய வேண்டுமா அல்லது அவர்களுக்கு முரண்பட்டும் புரியலாமா? ஸலஃபீ அறிஞர்கள் இந்தப் புரிதலின் நிலைப்பாட்டில் நபித்தோழர்கள் பக்கம் நிற்பதால் பிரச்சினை எழுகின்றது. முரண்படுகிறவர்கள், தங்களின் புரிதலையும் நிலைப்பாட்டையும் முற்படுத்துகிறார்கள். ஸலஃபீகள், நபித்தோழர்களின் புரிதலையும் நிலைப்பாட்டையும் முற்படுத்துகிறார்கள். இது இன்று தோன்றிய விவகாரம் அல்ல. நபித்தோழர்கள் உயிர் வாழும்போதே அவர்களுக்கு எதிராகக் கவாரிஜ், ராஃபிளா, கத்ரிய்யா போன்றோர் கிளம்பிய காலம் முதலே இருக்கின்ற விவகாரம். அன்றிலிருந்தே ஸலஃபீ நிலைப்பாடும் அதற்கு முரணான நிலைப்பாடும் தோன்றிவிட்டது. நபித்தோழர்கள் போல சத்தியத்தில் உறுதியாக இருக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களின் நிலைப்பாட்டையே தனது மார்க்கமாக எடுத்துக்கொள்வார். அதில் தனது சொந்த அபிப்ராயங்களை மார்க்கத்தின் பெயரால் பரப்பமாட்டார். இவ்விசயத்தில் ஓர் எளிமையான அறிமுகம்தான் இந்நூல்.