இறைவேதத்தையும் மனிதர்களின் கற்பனைப் புத்தகம் என்று நிராகரிப்பவர்கள் இருக்கிறார்கள். மனிதனின் வார்த்தைகள் ஒரு புத்தகமாக வெளிப்படலாம்; இறைவனுடையது அப்படி வெளிப்படாது எனும் மனப்போக்கு இவர்களுடையது. எனினும், இதைப் பகுத்தறிவு என்று நம்பிவிடுகிறார்கள். மனிதனால் முடியும், இறைவனால் முடியாது என்கிற வினோதக் கற்பனை எங்கிருந்து உற்பத்தியானது? நாத்திக மூளைதான், வேறெங்கே? இதனால் வேத வெளிப்பாட்டின் மூல வரலாற்றைப் புறக்கணிப்பதும், வேதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகம் கொள்வதும் உறுத்தலின்றி ஏற்கப்படுகின்றது. ஒரு புத்தகம் அதன் ஒவ்வொரு வார்த்தையும் வெளிப்படத் தொடங்கிய நிமிடத்திலிருந்து மிக நுட்பமான வழிமுறைகளில் பாதுகாக்கப்படுகிறது எனில் அது திருக்குர்ஆன் மட்டும்தான். இறைப் பாதுகாப்பின் அற்புதத்தை இறுதி வேதத்திற்கு ஒரு தனித்துவமான அந்தஸ்தாக அல்லாஹ் வழங்கியுள்ளான். இதை ஷெய்க் அலீ இப்னு சுலைமான் அல்அபீது மிக எளிமையாக, சுருக்கமாக இந்நூலில் விவரிக்கிறார்.
Choosing a selection results in a full page refresh.