Detailed Description
ஒவ்வொரு தொழுகையிலும் நாம் முதலில் ஓதுவது திருக்குர்ஆனின் அல்ஃபாத்திஹா அத்தியாயம்தான். தொழுகையை நமது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதது போல இந்த ஸூறாவையும் பிரிக்க முடியாது. உண்மையில் நமது வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளுக்குமான வழிகாட்டல்கள் இதனுள் இருக்கின்றது. இதை உம்முல் கிதாப் – வேதத்தின் தாய் என்பது நபிமொழி. வேதம் இறக்கப்பட்டது நேர்வழி காட்டவே. அப்படியானால் நேர்வழிக்கான எல்லா அடிப்படைகளையும் சொல்லித் தருகின்ற தாயாக இந்த ஸூறா இருக்கின்றது. அல்லாஹ்வை அவனது மகத்துவம், பெயர்கள் பண்புகள், வணக்கங்களால் ஏகத்துவப்படுத்துவதையும், அவனது உதவியை மட்டுமே நம்பி வாழ்கின்ற உளத்தூய்மையையும், அவனது நேர்வழியில் சென்றோரின் வாழ்வைப் பின்பற்றும் முன்மாதிரியையும், அவனை நிராகரித்தோரை நிராகரிக்கின்ற கொள்கைப் பிடிப்பையும் இந்த ஸூறா அழுத்தமாக வலியுறுத்துகின்றது. இதை ஒரு பிரார்த்தனையாக அல்லாஹ் இறக்கியிருப்பதும் இதன் தனிச்சிறப்பாகும். ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர் மிக அழகிய வார்த்தைகளில் நமக்குப் புரியும்விதமாக இங்கு விவரிக்கிறார்கள்.