தொழுகையில்கூட பிரிந்து நிற்காமல் நெருக்கமாகச் சேர்ந்திருக்க வலியுறுத்துகிறது அல்லாஹ்வின் மார்க்கம். இதன் உண்மையான குறிக்கோள் வரிசையில் நின்று வணங்குவது மட்டுமல்ல. வாழ்க்கையிலும் சேர்ந்து நின்று அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதே. வாழ்வே வணக்கமாகும் தருணங்களில் இதுவும் ஒன்று. ஒரே இறைவனை வணங்கி, ஒரே வேதத்தை ஓதி, ஒரே நபிவழியைப் பின்பற்றுகிறவர்கள் எப்படித்தான் பிரிவினையை வெறுக்காமல் இருக்க முடியும்? ஒன்றுபட்டு வாழ்வது அருள்வளம்; பலம். பிரிந்து வாழ்வது சாபம்; பலவீனம். குடும்ப வாழ்வில், அண்டைவீட்டார் உறவில், சொந்தபந்தத்தில், மொத்த சமூகத்தில் என எல்லா நிலைகளிலும் ஒரு முஸ்லிம் நல்லிணக்கத்தை நாட வேண்டும். இதைத் தீமையான வழிகளில் சாத்தியப்படுத்த முடியாது. காரணம், அதுவே சாபத்தைக் கொண்டுவரும் பெருந்தீமை. ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலில் அல்லாஹ் விரும்புகின்ற முறையில் சேர்ந்து வாழ்வதற்கு வழிகாட்டுகிறார்கள். பிரிவினையை உருவாக்கும் தீய பண்புகளை அடையாளம் காட்டி நன்மையின் பாதையில் நம்மை ஒன்றுபடுத்த உபதேசம் செய்கிறார்கள்.
Choosing a selection results in a full page refresh.