இன்று உலகின் பெரும் சோதனைக்கு உதிரமாக ஓடிக்கொண்டிருப்பது பெண்ணின் உடல்தான். எல்லா ஊடகங்களிலும் பெண் என்பவள் விற்பனைப் பொருள். அவளின் மீதான இச்சையைத் தூண்டிவிட்டு எதையும் விற்கலாம், எதையும் பேசலாம், எழுதலாம், காட்சிப்படுத்தலாம் என்ற குரூரப்போக்கை இறைநிராகரிப்பாளர்கள் வெளிப்படுத்திவருகிறார்கள். இதனால் முழு உலகத்திலும் ஆண்கள் சோதனைக்கு ஆளாகிவருகிறார்கள். பெரும் பாவங்களின் படுகுழிகள் எந்தப் பக்கம் திரும்பினாலும் தோண்டப்பட்டுக் காத்திருக்கின்றன. கற்புக்கும் குடும்பக் கட்டமைப்புக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த நிலை மாறியுள்ளது. இத்தகைய சூழலில் ஆண்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் ஓர் அரணைத் தேடி அடைக்கலமாகின்ற ஆபத்து நிலையில் இருக்கின்றார்கள். இஸ்லாம்தான் அரண். அதன் வழிகாட்டலைவிடச் சிறந்த அரண் எதுவுமில்லை. ஷெய்க் மஜ்தீ இப்னு அதிய்யா இது குறித்த வழிகாட்டலைக் குர்ஆன் நபிவழி ஆதாரங்களிலிருந்து நமக்குத் தொகுத்தளித்துள்ளார். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வாசிக்க வேண்டிய நூல் இது.
Choosing a selection results in a full page refresh.