Detailed Description
தீமைகளெல்லாம் நன்மைகளின் இடத்தில் வைத்து விருதுகள் பெறுகின்ற காலத்தில் வாழ்கிறோம். இந்த வளர்ச்சிக்கு எது காரணம்? தீயவர்கள் தீமைகளை ஏவுகிறார்கள்; நன்மைகளைத் தடுக்கிறார்கள். இதன் வெற்றியாகத்தான் தீமைகளைக் கொண்டாடுகிறார்கள். என்ன இதையெல்லாம் அவர்கள் கடமை என்று நினைத்தா செய்கிறார்கள்? இல்லை, மனஇச்சைப்படி உலக ஆதாயங்களுக்காகச் செய்கிறார்கள். இந்த நிலைமையை மாற்ற முடியுமா? முடியும், நாம் நன்மைகளை ஏவ வேண்டும்; தீமைகளைத் தடுக்க வேண்டும். இதனால் நன்மைகளின் பலன்களை மனிதகுலம் சுகித்து மகிழ்ச்சி அடையும். எனவே, நன்மையை ஏவுவது மட்டுமல்ல, தீமையைத் தடுக்கவும் இயங்க வேண்டும். இதை நமது ஆற்றலின் அளவுக்கேற்ப அழகிய முறையில் செய்ய முடியும். நாமோ இறைதிருப்தியை வேண்டி இது ஒரு கடமை என்றே செய்யக்கூடியவர்கள். எனவே, வெற்றி நிச்சயம். ஆனால் இதற்கான தெளிவான அறிவு முக்கியம். இதுவே ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) இந்நூலில் விவரிக்கும் ஞானம்.