Detailed Description
அல்லாஹ் நான்கு வார்த்தைகளுக்கு மிக மேலான சிறப்புக்களையும் அவற்றின் மேன்மையை அறிவிக்கின்ற அம்சங்களையும் ஏற்படுத்தியுள்ளான். அந்த வார்த்தைகளுக்கு அவன் கொடுத்துள்ள மகிமையும் உயர்ந்த படித்தரமும் மற்ற வார்த்தைகளைவிட அவற்றுக்குத் தனித்தன்மைகளை வழங்கியுள்ளது. அந்நான்கு வார்த்தைகள் இவையே: ஸுப்ஹானல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர். இந்த வார்த்தைகளின் சிறப்புகள் குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை ஓதிவருவதின் நன்மைகளும், இம்மை மற்றும் மறுமையின் தொடர்ச்சியான நற்பேறுகளும் நபிமொழிகளில் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. இத்தொகுப்பில் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் குறித்த விளக்க நூலும் இணைக்கப்பட்டுள்ளது. ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர் அவர்களின் இந்த இரண்டு நூல்களும் நமது வழிபாடுகளை அர்த்தமுள்ளதாய் நாம் ஆக்கிக்கொள்ள மிகவும் உதவுகின்றன.