ஒவ்வொருவரும் இப்போது உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் இறந்துபோகவும் செய்வோம். இதை எவராலும் மறுக்க முடியாது. இன்னுமோர் உண்மையும் இருக்கின்றது. நாம் இறந்த பின்பு நம்மிடம் விசாரணை நடக்கும். அது பல கட்டங்களாக இருக்கும். அதில் முதல் கட்ட விசாரணை மண்ணறையில் இருக்கும். வானவர்கள் முன்கரும் நகீரும் நம்மை எழுப்பி உட்காரவைத்து கேள்விகள் கேட்பார்கள். அப்போது நமக்குத் திரும்ப உயிர் தரப்பட்டிருக்கும். உன் இறைவன் யார், உன் மார்க்கம் எது, உன் நபி யார் என்று கேட்பார்கள். இதற்குப் பதிலளிப்பதை வைத்துத்தான் நமது மறுமை வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் முடிவாகின்றது. அதாவது, சொர்க்க வாழ்க்கையும் நரக வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது. சொல்லப்போனால், இந்த உலகில் உயிர் வாழ்ந்துகொண்டிருந்த நாம் எந்த விசயங்களை மிகவும் முக்கியமாக அறிந்து செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை அது தெளிவாக உணர்த்துகின்றது. இறந்த பின்பு எதையும் அறிந்து பின்பற்ற முடியாது. எல்லாமே முடிந்துவிட்ட நேரம் அது. இந்தப் புத்தகம் மறுமையின் முதல் கட்ட விசாரணையில் நம்மை வெற்றி அடையச் செய்கின்ற மூன்று அடிப்படைகளை விளக்கி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் இது நமது வாழ்வை வெற்றிகரமான பாதையில் வழிநடத்துகின்ற மகத்தான புத்தகம்.
Choosing a selection results in a full page refresh.