Detailed Description
இந்தப் பூமியில் நாம் எத்தனையோ உயிரினங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜின்களும் அந்த உயிரினங்களில் ஒன்று. இதென்ன ஆடு, மாடு, காக்கை, குருவி, புழு பூச்சிகளைச் சொல்வதுபோல் சொல்கிறீர்களே எனக் கேட்கலாம். என்ன, ஜின் இனம் ஓர் உயிரினம் இல்லையா? கண்களுக்குத் தெரியாத உண்மைகளை எல்லாம் பொய்கள் என்பீர்களோ? பூமியில் நமக்கு முன்பே படைக்கப்பட்ட இனம் ஜின். நமது புலக் கண்களால் அவர்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், நம்மை அவர்கள் பார்க்கிறார்கள். நமது பிரதேசங்களில் பறக்கிறார்கள்; தங்கவும் செய்கிறார்கள். அவர்களுக்கும் நமக்குமான இந்த ஒரே உலகத்தில் அவர்களாலும் நம்மாலும் நிறைய காரியங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவர்களில் தீயவர்களைத்தான் ஷைத்தான்கள் என்கிறோம். அந்த ஷைத்தான்களின் தலைவன்தான் இப்லீஸ். அலாவுதீனின் அற்புத விளக்கினுள் பூதம் வெளிப்பட்ட பொய்க்கதை ஒரு ஜின் கதை. ஆனால், ஷெய்க் வஹீது அப்துஸ்ஸலாம் பாலீ எழுதியுள்ள இந்நூல் குர்ஆன் நபிமொழி அற்புத விளக்கின் ஒளியில் ஜின் இனத்தின் அமானுஷ்ய உண்மைக் கதையைச் சொல்வதோடு, ஜின் இனத்து ஷைத்தான்களின் தீங்குகளைவிட்டு நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதற்கும் வழிகாட்டுகின்றது.