Detailed Description
முஸ்லிம்களிடையே கடந்த காலத்தில் உருவாகிய பிரிவுகளால் காலங்காலமாக இருந்துவரும் கருத்துமோதல்களுக்கும், தற்காலத்தில் தோன்றியுள்ள பிணக்குகளுக்கும் ஒரே காரணமாக நான் நம்புவது, இவர்கள் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹைப் பின்பற்றுகிற மூன்றாவது விசயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதுதான்.
ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாக வாதிக்கிறார்கள். இவர்களின் பேச்சுகளைக் கேட்கும் இளைஞர்கள் குழம்பிப் போகிறார்கள். ‘சகோதரரே! இந்தக் கூட்டமும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது; அவர்களும் குர்ஆன், ஹதீஸையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள்..’ எனத் தடுமாறுகிறார்கள்.
யார் சொல்வது உண்மை? எப்படி அதைத் தெளிவாகப் பிரித்தறிவது? இதற்குத்தான் குர்ஆன், நபிவழி, அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் வழிமுறை இருக்கிறது. ஒருவர் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் ஆகிய நபித்தோழர்களையும் அவர்களைப் பின்பற்றிய நல்லோர்களையும் பின்பற்றாமல், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றினால், நிச்சயமாக அவர் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றவேமாட்டார். மாறாக, தன் சுய அறிவையும் மனஇச்சையையுமே பின்பற்றுவார்.
– இமாமவர்களின் வரிகள் சில.