Detailed Description
இஸ்லாமிய வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் செயல்படுத்துகிறோம். தொழுகையில் குறை வராத குறிக்கோள் சிலரிடம். துல்லியமாகக் கணக்கிட்டு ஸகாத் வழங்குகிற துரிதம் சிலரிடம். அநீதி என்றால் அடுத்த விநாடியே எதிர்க்குரல் கொடுக்கும் வீரம் சிலரிடம். இதில் எதுவாக இருப்பினும் தெளிவான அறிவில்லாமல் செய்தால் அனைத்தும் வீணே. சிறந்த தந்தையாக இருக்கும் சிலர், சிறந்த கணவராக இருப்பதில்லை. சிறந்த மனைவியாக இருக்கும் சிலர், சிறந்த அண்டை வீட்டாராக இருப்பதில்லை. சிறந்த உபதேசகராக இருக்கும் சிலர், சிறந்த பிள்ளையாக இருப்பதில்லை. இந்த முரண்பாடுகள் ஏன் உருவாகின்றன? எங்கே கோளாறு? ஒருவரின் இஸ்லாமியக் கல்விக்கும் செயலுக்கும் இடைவெளி ஏன்? தான் கற்றதைத் தன்னோடு நிறுத்திக்கொள்பவருக்கு எங்கு ஆபத்து காத்திருக்கிறது? இல்ம், அமல், தஅவா எனும் முக்கோண முஸ்லிம் வாழ்வியலில் எதை, எப்போது முதன்மைப்படுத்துவது? ஒவ்வொன்றுக்குமான முக்கியத்துவம் என்ன? ஒன்றோடு ஒன்று எப்படித் தொடர்புபட்டுள்ளன? – இந்தக் கல்வியில் தள்ளாடும் படகுகளாகத் தடுமாறும் நம்மை இழுத்துக் கட்டிச் சரியான திசையின் கோணத்தில் வழிகாட்கிறார் ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்தப் புத்தகத்தில்.