ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் ஹலால் ஹராம் நூலுக்கு மறுப்புரை எழுதி வெளியிட்டார்கள். அது ஷெய்க் யூசுஃப் அல்கர்ளாவீ தமது நூலில் செய்த ஆய்வுப் பிழைகள் குறித்து சமூகத்தை எச்சரிப்பதாக அமைந்தது. இன்று இந்நூலின் தேவை மிகவும் கூடிவிட்டது. இசை, இசைப்பாட்டு, சினிமா, உயிருள்ளவையின் ஓவியங்கள், சிற்பங்கள், செஸ் விளையாட்டு, பட்டாடை, தாடி, பெண்கள் முகத்தை மறைத்தல் முதலியன அண்மைக் காலங்களில் விவாதப் பொருளாகின்றன. தங்கள் அபிப்ராயங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த விவாதத்தை ஆய்வின் பெயரில் தொடங்கிவைத்ததில் ஷெய்க் கர்ளாவீக்குப் பெரிய பங்குண்டு. ஹலால் ஹராம் புத்தகம் அதன் ஒரு தொடக்கமாக ஆகிவிட்டது. கல்வி அடிப்படையிலான உரையாடல் என்பது சத்தியத்தை அறிவதற்கு உதவக்கூடியது. ஷெய்க் ஃபவ்ஸான் இந்நூலின் மூலம் சத்தியத்தைத் தக்க சான்றுகளுடனும் முன்சென்ற பேரறிஞர்கள் பலரின் கூற்றுகளுடனும் எழுதியுள்ளார்கள். சீர்தூக்கிப் பார்த்தால் நமக்குள் சீர்திருத்தம் வரும்.
Choosing a selection results in a full page refresh.