Detailed Description
இன்று இஸ்லாம் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பரபரப்பான பேச்சை ஊடகங்கள் உண்டாக்கி வருகின்றன. ஆனால், இஸ்லாம் தன்னைச் சரியாக வெளிப்படுத்திக்கொள்ளும் தளம் பெரும்பாலும் இருப்பதில்லை. இதனால் உண்மைக்குப் புறம்பான செய்திகள்தான் பரவுகின்றன. இதில் முக்கியமாக இடம்பெறுவது இஸ்லாமிய நடைமுறைகளாகும். ஒரு பெரும் சமூகம் பிற சமூகங்களிலிருந்து மாறுபட்ட நடைமுறைகள் கொண்டிருப்பதாகச் சர்ச்சையாளர்கள் கவனிக்கிறார்கள். உண்மையில், இந்த நூலின் முதல் தொகுதியையும் இந்தத் தொகுதியையும் வாசிப்பவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள், வாழ்வியல் சட்டங்கள், ஒழுக்கங்கள் குறித்த எளிமையான, அறிவுப்பூர்வமான அறிமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். ஒரு தெளிவான கல்வி சார்ந்த உரையாடல்தான் எதிர்மறை எண்ணங்களை நீக்குகின்றன. அதற்கு உதவக்கூடிய கட்டுரைகள் இந்நூலில் இருக்கின்றன. இவற்றை நேரிய சிந்தனையுடன் வாசித்துச் சீர்தூக்கிப் பார்ப்பவர், அனைவருக்கும் இஸ்லாம் என்ற பிரகடனத்தின் நியாயத்தை உணர்வார்.