வேதங்களில் மகத்தானது திருக்குர்ஆன். ஆயத்துல் குர்ஸீ திருக்குர்ஆனின் வசனங்களில் மகத்தானது. அப்படியானால் வேத வசனங்கள் அனைத்திலும் மகத்தானது என்று அர்த்தம். குர்ஸீ ஒரு படைப்பு. அது நமது கற்பனைக்கும் உவமைக்கும் கட்டுப்படாத இறைவனின் பாதத்தலம். அதுவே எல்லா வானங்களையும் பூமிகளையும் உள்ளடக்கி மிக விசாலமானது. அதற்கு எதிரே, மேலே உயர்ந்திருப்பதுதான் அர்ஷ். இது குர்ஸீயைவிட பிரமாண்டமான படைப்பு. இதற்கு முன்பு குர்ஸீ மிகவும் சிறியது; பாலைவனத்தில் வீசிய சின்னஞ்சிறு மோதிரம் போல அற்பமானது. ஆனாலும் தலைக்கு மேல் வானத்தைப் பார்க்கும் நமக்கு, இந்த வானமே மிகப் பெரிய பிரமிப்புதான். குர்ஸீயோ ஏழு வானங்களையும் ஏழு பூமிகளையும் உள்ளடக்கி விசாலமாக பரவி இருக்கும் பிரமிப்பு. எனினும், நாம் அதைப் பார்த்ததில்லை. அர்ஷையும் பார்த்ததில்லை. இவ்வளவையும் படைத்து பராமரிக்கும் ஒரே இரட்சகன் அல்லாஹ்வையும் பார்த்ததில்லை. அல்லாஹ்வோ மிகவும் மகத்தானவன். அவனை அறிவதற்கு அவனது வார்த்தைகளே போதுமான ஆதாரங்கள்தான். அதில் மகத்தான வார்த்தை ஆயத்துல் குர்ஸீ. அவனது ஏகத்துவத்தின் மகத்தான ஆதாரங்களை இது நமக்கு விவரிக்கிறது. வாசியுங்கள்.
Choosing a selection results in a full page refresh.