{"title":"Tamil | தமிழ்","description":"","products":[{"product_id":"niyanamiga-quran-sollukku-soll-vol-1-quran-word-to-word","title":"Niyanamiga Quran Sollukku Soll Vol-1 - Quran Word To Word","description":"","brand":"Darul Huda","offers":[{"title":"Default Title","offer_id":43288078680098,"sku":"DHT0014","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DHT0014-1.webp?v=1732250270"},{"product_id":"niyanamiga-quran-sollukku-soll-vol-2-quran-word-to-word","title":"Niyanamiga Quran Sollukku Soll Vol-2 - Quran Word To Word","description":"","brand":"Darul Huda","offers":[{"title":"Default Title","offer_id":43288079433762,"sku":"DHT0015","price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DHT0015-1.webp?v=1732250275"},{"product_id":"niyanamiga-quran-sollukku-soll-vol-3-quran-word-to-word","title":"Niyanamiga Quran Sollukku Soll Vol-3 - Quran Word To Word","description":"","brand":"Darul Huda","offers":[{"title":"Default Title","offer_id":43288080252962,"sku":"DHT0016","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DHT0016-1.webp?v=1732250279"},{"product_id":"ilmuth-tajweed","title":"Ilmuth Tajweed","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eஅல் குர் ஆனை திருத்தமாக ஓதுவதற்கு தேவையான தஜ்வீது சட்டங்களை இலகுவான உதாரணங்களுடன் விவரிக்கின்ற நூல்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Darul Huda","offers":[{"title":"Default Title","offer_id":43288081072162,"sku":"DHT0017","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DHT0017-1.webp?v=1732250283"},{"product_id":"al-lulu-wal-marjan","title":"Al-Lulu Wal-Marjan","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eAl Lulu Wal Marjan is a great work of compilation executed by Muhammad Fouad Abdul-Baqi. Al Lulu Wal Marjan means ‘G\u003cspan class=\"`morecontent`\"\u003eems and Pearls’ in English and it is a collection of all the Ahadith which are common between Sahih Bukhari and Sahih Muslim. These two great Shaykhs spent a lifetime to collect and authenticate the sayings of the Prophet [Islamic phrases=\"Shallallahu 'alaihi wa Sallam\"]H[\/Islamic] and now the work common among these two scholars is present in the form of Al Lulu Wal Marjan along with Tamil translation.\u003c\/span\u003e\n\u003c\/h4\u003e","brand":"Sajidha Book Centre","offers":[{"title":"Default Title","offer_id":43288084512802,"sku":"STB0003","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/STB0003-1.webp?v=1732250309"},{"product_id":"sharhus-sunnah-tamilization-lessons-notes","title":"Sharhus Sunnah - Tamilization | Lessons | Notes","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅஹ்லுஸ் ஸுன்னா -வின் அழகிய கொள்கை வழிமுறைகளை தெளிவாக அறிந்து நேர்வழியில் பயணிக்க பர்பஹாரி அவர்களின் ஷர்ஹுஸ் ஸுன்னா. அவசியம் படிப்பீர்...\u003c\/h4\u003e","brand":"Darul Huda","offers":[{"title":"Default Title","offer_id":43288144871458,"sku":"DHT0018","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DHT0018-1.webp?v=1732250622"},{"product_id":"haayiyyatu-ibni-abee-dawood","title":"Haayiyyatu Ibni Abee Dawood","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஆ உடைய சரியான கொள்கைகளை தெளிவாக விளக்கிக் கூறி வழிகேடர்களின் தவறான சித்தாந்தங்களைப் பிரித்தறிவிக்கும் கொள்கை நூல்!\u003c\/h4\u003e","brand":"Darul Huda","offers":[{"title":"Default Title","offer_id":43288183373858,"sku":"DHT0022","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DHT0022-1.webp?v=1732250891"},{"product_id":"hisnul-muslim-big-tamil-ஹிஸ்னுல்-முஸ்லிம்","title":"Hisnul Muslim Big Tamil ஹிஸ்னுல் முஸ்லிம்","description":"\u003ch4\u003eஹிஸ்னுல் முஸ்லிம் - முஸ்லிமின் அரண்\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify\"\u003e(குர்ஆன் ஹதீஸில் வந்துள்ள திக்ருகள்-பிரார்த்தனைகள்)\u003c\/h4\u003e","brand":"Sajidha Book Centre","offers":[{"title":"Default Title","offer_id":43288184193058,"sku":"STB0005","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/STB0005-1.webp?v=1732250895"},{"product_id":"al-asmaaul-husna-allaahuvain-paerazhugu-paeyargal","title":"Al Asmaaul Husna Allaahuvain Paerazhugu Paeyargal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅல்அஸ்மா என்றால் பெயர்கள். அல்ஹுஸ்னா என்றால் பேரழகு. பெயர்களிலெல்லாம் பேரழகு வாய்ந்த பெயர்களையே இங்கு அல்அஸ்மாஉல் ஹுஸ்னா எனப்படுகிறது. இவை நம்மைப் படைத்தவனின் பெயர்கள் அல்லவா? பேரழகு இல்லாமலா இருக்கும்? அவனுடைய பண்புகளைவிடப் பேரழகு இருக்க முடியுமா? அவனுடைய பண்புகளுக்கு அவனே சூட்டிக்கொண்ட பெயர்கள் பேரழகு மிக்கவையே. அதனால் அவனுடைய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் இணையே இல்லை.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஆனால், அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்களைப் பொருள் அறியாமல் மனப்பாடம் செய்திருப்போர் நம்மில் உண்டு. இது நமக்கு எவ்வளவு இழப்பு! அல்லாஹ்வின் பண்புகளைத் தெரியாத இழப்பல்லவா? உண்மையில், அவனுடைய பெயர்கள் வெற்றுச் சொற்கள் அல்ல. அவனின் பண்புகளை வருணிக்கும் இறைநம்பிக்கையின் அடிப்படை ஆதாரங்கள்; பாடங்கள். அல்லாஹ் யார் என்கிற அறிவின் அரிச்சுவடிகள். இந்நூலில் ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்-பத்ர் ஒவ்வொரு பெயரின் ஆதாரங்களையும் நுட்பங்களையும் சுருக்கமாக விவரிக்கிறார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288184225826,"sku":"KVT0015","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0015-1.webp?v=1732250899"},{"product_id":"al-isthiqaamah-maarkkathil-nilaiththiruthal","title":"Al Isthiqaamah Maarkkathil Nilaiththiruthal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅல்இஸ்திகாமத் எனும் நிலைத்திருக்கும் தன்மையில்தான் ஈருல முன்னேற்றமும், இறையடியானின் வெற்றியும், அனைத்துக் காரியங்களின் சீரமைப்பும் இருக்கின்றது. தனக்கு உண்மையாக உபதேசம் செய்யவும், அதில் அவர் வெற்றி பெறவும் விரும்பக்கூடிய எவரும் தனது மரணம் வரை இஸ்லாமியக் கல்வியிலும், நற்செயலிலும், ஒரே நிலையில் இருப்பதிலும் இந்த இஸ்திகாமத்தைத்தான் அல்லாஹ்விடம் உதவியைத் தேடிய நிலையில் பெரிதும் பயன்படுத்திக் கொள்வார்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288185045026,"sku":"KVT0016","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0016-1.webp?v=1732250903"},{"product_id":"allaah-ungalai-neasikka-vaenduma","title":"Allaah Ungalai Neasikka Vaenduma","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஒரே இறைவனாகிய அல்லாஹ்வை நேசிக்கும் உள்ளம் நம்மில் அனைவருக்கும் உண்டு. ஆனால், அவனுடைய நேசத்தை அடைகின்ற தகுதியில் இருக்கின்றோமா என்பது கேள்வி. ஏனெனில், அவனுக்குக் கீழ்ப்படியாமல் மாறுசெய்கின்ற வாழ்க்கையில் உழல்கிறோம். அவன் நினைத்தால் உடனுக்குடன் நம்மைத் தண்டிக்க முடியும். அவனோ தன்னுடைய கருணையால் நம்மை விட்டுவைத்திருக்கிறான். இது நாம் அவனிடம் திரும்பி மன்னிப்புக் கேட்டு, அவனுடைய நேசர்களாக மாறுவதற்கான அவகாசம்தான். இப்போது நாம் செய்ய வேண்டியது, அல்லாஹ்வின் நேசத்தை அடைவதற்கான பாதையில் அடியெடுத்துவைத்து பயணிப்பதே. இதற்கோர் எளிமையான, சுருக்கமான குறிப்பேடுதான் இது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288185864226,"sku":"KVT0017","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0017-1.webp?v=1732250907"},{"product_id":"allaahuvinpaal-azhaippathil-irai-thoothargalin-vazhimurai-athilthaan-niyaanam-puththisaaliththanam","title":"Allaahuvinpaal Azhaippathil Irai Thoothargalin Vazhimurai - Athilthaan Niyaanam, Puththisaaliththanam","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eமானுடத்தின் மீட்சியை இறைத்தூதர்கள் களமாடிய வரலாற்றுப் பாத்திரத்தின் வழிமுறையில் ஆக்கப்பூர்வமாய் வளர்த்தெடுப்பது இஸ்லாமிய நுண்ணரசியல். இதன் வேர்களும் கிளைகளும் விழுதுகளும் ஓரிறை வழிபாட்டை உரத்துச் சொல்லி பொய் தெய்வங்களைப் புறக்கணிக்கும் புரட்சிப் பாதையில் தழைத்தது. கொடி போல சுற்றி வளைத்துப் படர்ந்த இதன் இஸ்லாமியத் தலைமையின் கிடுக்குப் பிடியில் சர்வ தேச அரசியல் அதிகாரங்களும் கட்டுப்பாட்டுக்குள் விழுந்தன. இறையில்லம் கஅபாவில் தொழுவதற்கும் தடுக்கப்பட்ட நபிகளார், அடுத்த சில ஆண்டுகளில் அங்கிருந்த முந்நூற்று அறுபது சிலைகளை மட்டுமின்றி மொத்த அறபுலகச் சிலைகளையும் பாலை மண் குவியலுக்குள் புதைத்த வெற்றி வரலாறு இதன் நடைமுறைச் சாத்தியத்தை உண்மைப்படுத்தியது. ஒரு மின்சார பல்பினுள் ஒளிரும் இழை போல ஓர் ஆற்றல்மிகு வழிமுறை இந்த வெளிச்சப் பாய்ச்சலை மெல்லப் பரப்பி மக்களைக் கவர்ந்தது.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇதற்கு நேர் எதிரான வழிமுறைதான் அரசியல் இஸ்லாம். இது கம்யூனிஸ்ட்டுகளின் கிளர்ச்சி சிந்தனை போக்கில் குண்டக்க மண்டக்க குழப்ப நவீனங்களுடன் மக்களை உசுப்பேற்றி இஸ்லாமை வளர்த்தெடுக்கும் ஆர்வக் கோளாறு உணர்ச்சி அரசியல். முஸ்லிம்களைத் தற்கால வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க இந்தச் சிந்தனைப் பாணியில் நூதனமான வியாக்கியானங்களை முன்வைத்தார்கள் மவ்லானா மவ்தூதி, சையிது குதுப் போன்றவர்கள். முஸ்லிம் அரசியலில், குறிப்பாக கிலாஃபத், மன்னராட்சி, ஜனநாயகம் போன்ற தளங்களில் விவாதங்கள் உருவானதிலும், இஸ்லாமியத் தூதுச்செய்தியைக் கொண்டு சேர்க்கின்ற அழைப்புப்பணி இதன் அடிப்படையில் திசை மாறி அரசியல்மயப்பட்டதிலும், தீவிரவாத அல்லது மிதவாதக் குறுங்குழுக்களால் முஸ்லிம் இளைஞர்கள் சிதறிப்போனதிலும் இவர்களது சிந்தனையின் பாதிப்புகள் கவலைக்கிடமானவை. மூச்சிறைக்க ஊதப்பட்ட ஒரு கவர்ச்சியான பலூனின் வெடிப்பு ஒரு சமூகத்தையே அதிர வைத்துவருகிறது. அரசியல் பாராசூட்டில் முஸ்லிம் சமூகம் முன்னேறி உயரும் என்ற நம்பிக்கை பலூனாகப் பெருத்துவருகிறது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288185962530,"sku":"KVT0018","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0018-1.webp?v=1732250911"},{"product_id":"allaahvin-ninaivilthaan-ullangal-amaithi-paerum","title":"Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eதுன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003e– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288186912802,"sku":"KVT0019","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0019-1.webp?v=1732250915"},{"product_id":"anaivarukkum-islaam-part-1-adippadai-nambikkaigalin-arimuga-katturaigal","title":"Anaivarukkum Islaam Part 1 - Adippadai Nambikkaigalin Arimuga Katturaigal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅனைவருக்கும் இஸ்லாம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஆன்மிகமான, அறிவுப்பூர்வமான, அரசியலில் நீதி நிறைந்த, சமத்துவச் சமூகத்திற்குரிய கல்வியாகும். இது இறைவன் குறித்த தெளிவான புரிதலிலிருந்து தொடங்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நுழைந்து சமாதானத்தை வழங்குகிறது. இஸ்லாம் நம் அனைவரையும் படைத்த இறைவனின் சமயமாகும். அதாவது, அந்த ஒருவனால் இந்த உலகின் ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கப்பட்ட சமயமாகும். இதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முஸ்லிம்களாக அறியப்படுகிறார்கள். ஆனால், முஸ்லிம் தாய்தந்தைக்குப் பிறந்தவர்களுக்கு மட்டுமே இஸ்லாம் வழங்கப்பட்டதாக நினைத்துவிடக் கூடாது. இறைவன் அனைவருக்கும் இறைவன் என்பதுபோல இஸ்லாமும் அனைவருக்குமானதுதான். இங்குக் கீழ்ப்படிவோர், கீழ்ப்படியாதோர் என்பதே முஸ்லிமையும் முஸ்லிம் அல்லாதவரையும் பிரித்துக்காட்டுகின்றது. முஸ்லிம் என்றால் கீழ்ப்படிந்தவர் எனப் பொருள். காஃபிர் என்றால் மறுத்துவிட்டவர் எனப் பொருள். உலக நியதிப்படி ஒருவருக்கு இறைவன் இஸ்லாமை மறுத்துவிடுகின்ற சுதந்திரத்தைக் கொடுத்திருந்தாலும், அவனுடைய நியதிப்படி அனைவரையும் அதன்பக்கம் அழைக்கின்ற விருப்பத்தையே வெளிப்படுத்தியுள்ளான்.\u003c\/h4\u003e","brand":"SOL","offers":[{"title":"Default Title","offer_id":43288187732002,"sku":"KVT0020","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0020-1.webp?v=1732250918"},{"product_id":"anaivarukkum-islaam-part-2-arththamulla-vazhkaiyin-arimuga-katturaigal","title":"Anaivarukkum Islaam Part 2 - Arththamulla Vazhkaiyin Arimuga Katturaigal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇன்று இஸ்லாம் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பரபரப்பான பேச்சை ஊடகங்கள் உண்டாக்கி வருகின்றன. ஆனால், இஸ்லாம் தன்னைச் சரியாக வெளிப்படுத்திக்கொள்ளும் தளம் பெரும்பாலும் இருப்பதில்லை. இதனால் உண்மைக்குப் புறம்பான செய்திகள்தான் பரவுகின்றன. இதில் முக்கியமாக இடம்பெறுவது இஸ்லாமிய நடைமுறைகளாகும். ஒரு பெரும் சமூகம் பிற சமூகங்களிலிருந்து மாறுபட்ட நடைமுறைகள் கொண்டிருப்பதாகச் சர்ச்சையாளர்கள் கவனிக்கிறார்கள். உண்மையில், இந்த நூலின் முதல் தொகுதியையும் இந்தத் தொகுதியையும் வாசிப்பவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள், வாழ்வியல் சட்டங்கள், ஒழுக்கங்கள் குறித்த எளிமையான, அறிவுப்பூர்வமான அறிமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். ஒரு தெளிவான கல்வி சார்ந்த உரையாடல்தான் எதிர்மறை எண்ணங்களை நீக்குகின்றன. அதற்கு உதவக்கூடிய கட்டுரைகள் இந்நூலில் இருக்கின்றன. இவற்றை நேரிய சிந்தனையுடன் வாசித்துச் சீர்தூக்கிப் பார்ப்பவர், அனைவருக்கும் இஸ்லாம் என்ற பிரகடனத்தின் நியாயத்தை உணர்வார்.\u003c\/h4\u003e","brand":"SOL","offers":[{"title":"Default Title","offer_id":43288187764770,"sku":"KVT0021","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0021-1.webp?v=1732250921"},{"product_id":"azhugai-allaahvin-achchaththil","title":"Azhugai - Allaahvin Achchaththil","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eகுழந்தைகளோ அல்லது ஆபத்தில் சிக்கியவரோ மட்டுமே அழுவார்கள் என்றொரு புரிதல் நமக்குண்டு. அதற்கு உடலின் வேதனை அல்லது மன வேதனையைக் காரணமாகச் சொல்வோம். ஆனால், நம்மைப் படைத்தவனின் விசாரணைக்கு அஞ்சியோ, அவனது அன்பில் உருகியோ அழுவதை எத்தனை தடவை அனுபவித்துள்ளோம்? இதற்காக நமது கண்களிடம் குறைபட்டுக்கொள்ள முடியாது. ஏனெனில், அழுகை நமக்குள் உற்பத்தியாகும் இடம் கண்களல்ல; இதயம். நமது இதயத்தை நாமே குறைபட்டுக்கொள்வது மிகவும் தேவையானது. நமது மொத்த உணர்ச்சிகளும் உறுப்புகளும் இதயத்துடன் முடிச்சு போட்டு இணைக்கப்பட்டுள்ளன. இதனோடு அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும் அன்பையும் இணைத்துக்கொள்கிற வழிகளைச் சொல்கிறது ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷாவின் இந்தப் புத்தகம்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288189370402,"sku":"KVT0022","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0022-1.webp?v=1732250930"},{"product_id":"dhul-hajj-muharram-aashoora-sirappugalum-vazhipaadugalum","title":"Dhul Hajj Muharram Aashoora - Sirappugalum Vazhipaadugalum","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eதுல் ஹஜ்ஜும் முஹர்ரமும் அடுத்தடுத்து வருகின்ற மாதங்கள். துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாள்கள் மட்டுமின்றி அடுத்து வருகின்ற அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் மூன்று நாட்களும் வழிபாடுகள் கொண்டவை. அல்லாஹ்வின் இல்லம் கஅபாவை ஹஜ்ஜு செய்தல், இது முடியாதவர்கள் அரஃபா நோன்பிருத்தல், பெருநாள் சிறப்புத் தொழுகை, தக்பீர், அல்லாஹ்வின் நெருக்கத்தை வேண்டிப் பிராணிகளை அறுத்துப் பலியிடுதல் என்று பல வணக்கங்களின் மாதம் துல் ஹஜ்ஜு. முஹர்ரமோ ஹிஜ்ரீ ஆண்டின் தொடக்கமாக இருப்பதுடன், ஆஷூறா நோன்புகளும் படிப்பினைகளுமாக அமைந்திருக்கின்றது. இந்த இரண்டு மாதங்களுக்கும் வரலாற்றுப்பூர்வச் சிறப்புகளும் படிப்பினைகளும் வணக்கங்களும் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288189403170,"sku":"KVT0023","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0023-1.webp?v=1732250933"},{"product_id":"halaal-haraam-puththaga-maruppurai","title":"Halaal Haraam Puththaga Maruppurai","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் ஹலால் ஹராம் நூலுக்கு மறுப்புரை எழுதி வெளியிட்டார்கள். அது ஷெய்க் யூசுஃப் அல்கர்ளாவீ தமது நூலில் செய்த ஆய்வுப் பிழைகள் குறித்து சமூகத்தை எச்சரிப்பதாக அமைந்தது. இன்று இந்நூலின் தேவை மிகவும் கூடிவிட்டது. இசை, இசைப்பாட்டு, சினிமா, உயிருள்ளவையின் ஓவியங்கள், சிற்பங்கள், செஸ் விளையாட்டு, பட்டாடை, தாடி, பெண்கள் முகத்தை மறைத்தல் முதலியன அண்மைக் காலங்களில் விவாதப் பொருளாகின்றன. தங்கள் அபிப்ராயங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த விவாதத்தை ஆய்வின் பெயரில் தொடங்கிவைத்ததில் ஷெய்க் கர்ளாவீக்குப் பெரிய பங்குண்டு. ஹலால் ஹராம் புத்தகம் அதன் ஒரு தொடக்கமாக ஆகிவிட்டது. கல்வி அடிப்படையிலான உரையாடல் என்பது சத்தியத்தை அறிவதற்கு உதவக்கூடியது. ஷெய்க் ஃபவ்ஸான் இந்நூலின் மூலம் சத்தியத்தைத் தக்க சான்றுகளுடனும் முன்சென்ற பேரறிஞர்கள் பலரின் கூற்றுகளுடனும் எழுதியுள்ளார்கள். சீர்தூக்கிப் பார்த்தால் நமக்குள் சீர்திருத்தம் வரும்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288190222370,"sku":"KVT0024","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0024-1.webp?v=1732250937"},{"product_id":"hijab-yeatharkaaga-magalir-mugam-maeni-maraiththal-thiraththal-sattangal","title":"Hijab Yeatharkaaga | Magalir Mugam Maeni Maraiththal Thiraththal Sattangal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஹிஜாப் என்றால் திரை எனப் பொருள். அழகுக்கும் அலங்காரத்திற்கும் முஸ்லிம் பெண் திரையிட்டு மறைத்த நிலையில்தான் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும். யாரிடம் தன் அழகை மறைக்கிறார்? எதற்காக மறைக்கிறார்? அந்நிய ஆண்களின் இச்சைக் கண்களைவிட்டு மறைக்கிறார். தன் கண்ணியத்தைக் கட்டிக்காக்க மறைக்கிறார். தன்னைக் காக்க மறைக்கிறார். எல்லாக் காலத்திற்குமான முற்போக்குப் பெண்ணியச் சிந்தனையை எப்போதோ நபிகளார் வழிகாட்டிச் சென்றுவிட்டார்கள். இது உண்மையில் இறைவனின் வழிகாட்டல். ஆணையும் பெண்ணையும் படைத்தவனின் ராஜ கட்டளை. அவனுக்குக் கீழ்ப்படிவதால் ஆணும் பெண்ணுமே நன்மை அடைவார்கள். அரைகுறை ஆடையோடு கோமாளிப் பெண்ணியம் பேசுவோர் அறிவில் முதிர்ச்சி அடையாமல் பெண்ணினத்தையே கோமாளியாக்கி பேராபத்தில் தள்ளிவருகிறார்கள். பெண்ணைப் பெண்ணாகப் பாவிக்காததைவிடப் பெரிய துரோகமும் சூழ்ச்சியும் துர்புத்தியும் எது பெண்ணே?\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288191074338,"sku":"KVT0025","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0025-1.webp?v=1732250941"},{"product_id":"inbamaai-vaazhnthida-iniya-vazhigal","title":"Inbamaai Vaazhnthida Iniya Vazhigal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eமன அழுத்தங்கள், கவலைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியைப் பெறுவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்கின்றது. அதன் மூலம்தான் வாழ்க்கை சிறந்ததாக அமைகின்றது; மகிழ்ச்சியும் இன்பமும் பரிபூரணமடைகின்றது. இந்த நிம்மதியைப் பெற இஸ்லாமிய மார்க்கரீதியான காரணிகளும், இயற்கைக் காரணிகளும், நடைமுறை சார்ந்த காரணிகளும் இருக்கின்றன. நம்பிக்கையாளர்களிடமே இவை அனைத்தும் சேர்ந்து காணப்படுகின்றன. மற்றவர்களிடம் இவை ஒன்று சேர்ந்து காணப்படுவதில்லை. அவற்றில் சிலவற்றை அவர்கள் பெற்றாலும் மிகவும் அவசியமான, சிறந்த காரணிகளை இழந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அடைய விரும்புகின்ற இந்த உயர்ந்த நோக்கத்தை அடையும் வழிமுறைகளை நான் இந்தச் சிறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். சிலர் இந்த நோக்கத்தை அடைந்து நிம்மதியாக வாழ்கிறார்கள். சிலர் இதனை அடையாமல் நிம்மதியற்று, துர்பாக்கியசாலிகளாக காலத்தைக் கழிக்கிறார்கள். சிலர் இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்வை வாழ்கிறார்கள். அல்லாஹ்தான் பாக்கியம் அளிப்பவன்; நன்மையான விசயங்களைச் செய்வதற்கும் தீமையான விசயங்களிலிருந்து தவிர்ந்துகொள்வதற்கும் உதவி அளிப்பவன்.\n– இமாமவர்களின் வரிகள் சில.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288191107106,"sku":"KVT0026","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0026-1.webp?v=1732250945"},{"product_id":"ippadikku-muslim","title":"Ippadikku Muslim","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஒரு முஸ்லிமும் அவருடைய முஸ்லிமல்லாத நண்பரும் இமெயிலில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள். எதார்த்தமும் விறுவிறுப்பும் கொண்ட முஸ்லிம் இமெயில்கள் ஃபார்வர்டு செய்யப்பட்டு, பல விவாதங்களைத் தோற்றுவிக்கிறது. அவர் பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் ஏன்’ புத்தகத்தை ஆக்ரோஷமாக விமர்சிக்கிறார். விவேகானந்தரின் ‘பக்தி யோகம்’ புத்தகத்திற்கும் மறுப்பு எழுதுகிறார். இறைநம்பிக்கை குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரத்தன்மை அவருடைய நண்பருக்குள் ஒரு ரசவாதத்தை உண்டுபண்ணுகிறது. அதன் முடிவு என்ன என்பதை ஒவ்வொரு இந்துவும், கிறித்தவரும் மட்டுமின்றி, முஸ்லிமும் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காக ஒரு தடவை அல்ல, பல தடவை படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம் இது.\u003c\/h4\u003e","brand":"SOL","offers":[{"title":"Default Title","offer_id":43288191959074,"sku":"KVT0027","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0027-1.webp?v=1732250948"},{"product_id":"irai-nambikkayil-pizhai-nambikkaigal-mukkiya-yeachcharikkaigal","title":"Irai Nambikkayil Pizhai Nambikkaigal - Mukkiya Yeachcharikkaigal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eநம்பிக்கை என்றாலே அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது பலரின் நம்பிக்கையாகி வருகிறது. அது ஜனநாயகம், கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு, அறிவுச் சுதந்திரம் போன்ற நவீன பெயர்களின் பதாகைகளில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு விளம்பரமாகின்றது. இதன் மூலம் எவ்வளவு இறைநிராகரிப்பான நம்பிக்கைக்கும் அங்கீகாரம் கிடைக்கின்றது. இதயத்தின் கண்களைத் தோண்டி நுரைக்கும் இருட்டில் ரசிப்பதால் பிழைநம்பிக்கையும் இறைநம்பிக்கை ஆகிவிடுமா?\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஒரு நம்பிக்கையை மகா பிழை என்றே நம்பினாலும், அதைச் சுட்டிக்காட்டுவது தன் நண்பருக்கு ஒவ்வாமை என்பதாலோ, இம்மாதிரியான விவாதங்கள் இணக்கமான சமூக உறவுக்குக் குந்தகம் என்பதாலோ கண்டுகொள்ளாமல் விடுகிற பிழை நல்ல சீர்திருத்தவாதிக்குப் பொருந்தாதது. பிழைகளைச் சுட்டிக்காட்டும் போக்கே பிழை எனும் நம்பிக்கை எவ்வளவு பிழையானது! ஆனால், மனித வாழ்க்கையே பிழைகளிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான போராட்டம்தானே?\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) இந்த நூலில் இறைநம்பிக்கை தொடர்பான பெரும் பிழைநம்பிக்கைகளை நுட்பமாக விளக்குகிறார்கள். இதன் தனித்தன்மை இது ஓர் உபதேச மறுப்புரை. தன் கவனத்திற்கு வந்த எழுத்தாளர்கள் சிலரின் வழிதவறிய கருத்துகளை மறுத்தும், அதிகமான மக்களிடம் உருவாகின்ற கொள்கைக் குழப்பங்களைத் தெளிவுபடுத்தியும் எழுதியுள்ளார்கள். மாமேதை ஒருவரின் உபதேசத்தில் நமது பிழைநம்பிக்கைகள் அகற்றப்பட இதை வாசிக்க வேண்டும்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288192778274,"sku":"KVT0028","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0028-1.webp?v=1732250952"},{"product_id":"irai-thoothar-sariththiram","title":"Irai Thoothar Sariththiram","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சரித்திரம் இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையின் எழுச்சி சரித்திரம். ஒரு வலுவான இறைநம்பிக்கையின் வெளிச்சம் அறபுலகை மட்டுமின்றி, முழு உலகையும் தட்டி எழுப்பிய காலத்தின் அற்புத விடியலை அதில் காணலாம். திருக்குர்ஆன் எனும் இறைவார்த்தைகளின் ஒளிக்கீற்றுகள் ஒரு தனிமனிதரின் வாழ்க்கையிலும் சமூகத்திலும் எத்தனை இருள்களைத் துளைத்து ஊடுருவி துவம்சம் செய்தன என்பதையும் இந்தச் சரித்திரம் காட்டுகின்றது. உண்மை என்னவெனில், இறைவழிகாட்டலின் உயிரோட்டம் இந்த உலகின் எல்லா மைய நீரோட்டங்களையும் சுத்திகரித்துவிடும் ஆற்றலின் பிறப்பிடமாகும். நபிகளாரின் இலட்சியப்பணியில் அந்த ஆற்றலின் இயக்கத்தைத் தொடக்கம் முதல் இறுதி வரை உணர்கிறோம். இந்த நூல் சீறா எனும் நபி பெருமகனார் சரித்திரத்தின் ஆதிப் பிரதியைத் தழுவிச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. எனினும், முதல் மனிதரும் இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்களிலிருந்து தொடங்கி, இறுதித் தூதரான நபிகளாரின் இறப்புக்கும் பிந்திய இஸ்லாமிய ஆட்சிக்காலத்தின் ஒரு நூற்றாண்டு வரை தொட்டுப் பேசுகின்றது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288192811042,"sku":"KVT0029","price":550.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0029-1.webp?v=1732250956"},{"product_id":"irai-thootharai-yeappadi-neasikka-veandum","title":"Irai Thootharai Yeappadi Neasikka Veandum","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்மீதான நேசம் நம்முடைய இறைநம்பிக்கையின் ஒரு தூண். அல்லாஹ்வுக்காக நமது நபியை நேசிக்கிறோம் எனில், அது நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு நேசரும் தம்முடைய நேசரைப் பின்பற்றுவார். நாம் நம்முடைய நேசரை எந்தளவுக்குப் பின்பற்றி வாழ்கிறோம்? நமது சகவாசம் யாருடன் உள்ளது? எங்கிருந்தாலும் நமது இறைத்தூதரின் பாதையில் பயணிக்கிறோமா? அல்லது, அதற்கு எதிரான பாதையில் செல்பவர்களுடன் பயணிக்கிறோமா? உண்மையாகவே, நமது நபியை நேசிக்கிறோம் என்பதின் அடையாளங்கள் என்ன? இது போன்ற வினாக்களுக்கு விடையளித்து வழிகாட்டுகின்றது இந்தச் சிறிய நூல்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288193630242,"sku":"KVT0030","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0030-1.webp?v=1732250960"},{"product_id":"irai-thoothargal-adam-muthal-muhammad-varai","title":"Irai Thoothargal - Adam Muthal Muhammad Varai","description":"\u003ch4 style=\"text-align: justify\"\u003eமனித இன வரலாறு என்பது உண்மையில் இறைத்தூதர்களின் வரலாறுகளைப் பேசுவதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஆனால், குரங்குக் கதைகளைப் பேசுவதிலிருந்து தொடங்குவார்கள் நாத்திகக் கற்பனையாளர்கள். குரங்கிலிருந்து மனிதன் என்ற பொய்க்கதையை குரங்குகள் புனையவில்லை. மனிதன்தான் புனைந்திருக்கிறான். இதனூடாக முதல் மனிதர் ஆதம் (அலை) வரலாறு மறுக்கப்படுவது மட்டுமின்றி, இறைத்தூதர் எனும் அவரின் உயர்ந்த நபித்துவ அந்தஸ்தும் மறுக்கப்படுகிறது. இதுதான் இறைநிராகரிப்பின் இருண்ட வரலாற்றுப் பக்கங்களில் முதல் பக்கம். இறைவனுக்கும் மனிதனுக்கும் எந்தப் புள்ளியிலும் தொடர்பில்லாமல் ஆக்குதலே இந்தப் பக்கத்தின் முதல் தலைப்பு. ஆனால், இறைத்தூதர்கள் சரித்திரம் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பை வெளிப்படுத்திய இறைவனின் உறவைச் சொல்கின்றது. கூடவே, அந்த உறவைத் துச்சமாகத் துண்டித்தவர்களின் அழிவையும் சொல்கின்றது. பூகோளரீதியாக இதை மறுக்க இயலா புறச்சான்றுகளும் பரவிக் கிடக்கின்றன. இதில் இறைவனின் தூதுச்செய்திக்கும் மனிதர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர்கள் நபிமார்கள். சமூகவியல் சரித்திரத்தின் நாயகர்கள். ஏகத்துவப் பரப்புரையின் எழுச்சித் தலைவர்கள். ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்களை அதிகம் எதிர்கொண்ட வீரர்கள். அல்லாஹ்வைத் தவிர எதற்கும் அஞ்சாத தீரர்கள். இவர்களில் ஆதம் (அலை) முதல் முஹம்மது (ஸல்) வரையிலான குர்ஆன் நினைவூட்டும் தூதர்களின் ஆதாரப்பூர்வச் சரித்திரத்தை ஷெய்க் ஃபுஆது ஷல்ஹூபு இந்நூலில் தொகுத்தளித்துள்ளார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288193663010,"sku":"KVT0031","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0031-1.webp?v=1732250964"},{"product_id":"irai-thothargal-vaazhvinilae-bothanaigal-padippinaigal","title":"Irai Thothargal Vaazhvinilae - Bothanaigal Padippinaigal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇறைத்தூதர்களின் வாழ்க்கை பொதுமக்களுடன் இரண்டறக் கலந்தது. காட்டில் தவமிருந்து, தனிமையின் தியான உலகில் திளைத்திருந்து, குரலற்ற துறவு வாழ்க்கையில் தூங்கிக் கழித்தவர்கள் அல்ல அவர்கள். சந்திக்கு வந்து சீர்திருத்தம் பேசியவர்கள். சீரழிந்தவர்களின் எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் துணிந்தவர்கள். மக்கள் நன்மைக்கு நல்வழி காட்டிய மகராசன்கள். இதில் இவர்களுக்கும் உலகம் இதுவரை கண்டுள்ள சீர்திருத்தச் செம்மல்களுக்குமான முக்கிய வேறுபாடு, இவர்கள் அல்லாஹ்வின் நேரடி வழிகாட்டலில் இயங்கினார்கள் என்பதே. எனவேதான், ரசிகர் கூட்டத்தை உருவாக்காமல் இறைநேசர்களை உருவாக்கினார்கள். எந்த மனிதனும் தன் இறைவனை நெருங்க எந்தப் புரோகிதனும் தேவையில்லை என்று பாடம் நடத்தினார்கள். புரோகிதம் இணைவைப்பை உருவாக்குகிறது. தூதர்கள் புரோகிதத்தையும் இணைவைப்பையும் ஒரே குரலில் எதிர்த்தார்கள். அநீதியைத் தடுப்பதற்கு அவர்கள் முன்னெடுத்த தைரியமான பிரசாரம் இன்று மக்கள் பணியில் களமாடும் அனைவருக்கும் பல போதனைகளையும் படிப்பினைகளையும் முன்வைக்கின்றன. இறைத்தூதர்களின் வாழ்வை வெறும் கதையாகக் கேட்பதைவிட்டு அர்த்தம் நிறைந்த போதனையாக, இலட்சியப் பாதையின் படிக்கட்டுகளாக, சீர்திருத்தத் திட்டங்களின் செயல்வடிவமாக ஷெய்க் ஃபுஆது ஷல்ஹூபு இந்நூலில் விவரிக்கிறார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288194482210,"sku":"KVT0032","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0032-1.webp?v=1732250968"},{"product_id":"iruthi-thootharin-iruthi-ubadesam-iruthi-pearurai","title":"Iruthi Thootharin Iruthi Ubadesam - Iruthi Pearurai","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஎதிரிகளிடம் யாருமே உபதேசம் கேட்க விரும்புவதில்லை. என்ன காரணம்? அவர்கள் நமக்குக் கேடு நினைப்பார்கள் என்றுதானே? அது சரி, ஆனால் நமது நலன் விரும்பிகளின் உபதேசத்தையும் உதறிவிட்டு ஓடுகிறோம் இல்லையா, அது ஏன்? ‘அதுவா? அவர்கள் இப்படியே உபதேசித்துக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் கேட்டதுதான்’ என்ற அலட்சியம். சரியா? நில்லுங்கள். ‘இனி கேட்க முடியாது. இதுதான் இறுதி உபதேசம். என் உயிர் பிரிகின்ற காலம் வந்துவிட்டது. இப்போது சொல்வதைக் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றோர் உபதேசம் நமது உள்ளத்தைத் தொட்டு நுழைந்தால் எப்படி அதை எதிர்கொள்வோம்? விடுங்கள். நமது உயிரினும் மேலான நபியின் குரலைக் கேட்கவே நற்பேறு கிட்டாத நமக்கு, அவர்களின் உயிர் பிரியும் காலம் நெருங்கிய கடைசிக் காலத்தில் அவர்கள் நமக்குச் சொன்ன இறுதி உபதேசம் ஒன்றைக் கேட்க காதுகள் கிட்டினால் எப்படித் துடிப்போம்?\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eபிரபஞ்சத்தின் படைப்பில் நமது நபியைவிட மேலான நமக்கான நலன் விரும்பியைத் தெரியுமா? மரணப் படுக்கையில் சொல்லச் சொல்ல உயில் எழுதப்பட்டு உயிர் பிரிந்த உருக்கமான பிரிவுக் கதைகள் உறவுகளில் கேட்டிருப்போமே? இதோ, எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபி ஓர் அதிகாலைத் தொழுகைக்குப் பின் தனது உம்மத்திற்குச் சொல்ல சொல்ல உருகி அழுது தோழர்கள் ஒப்புவித்த உயிலை அறிந்தோமா? இறந்தவரின் இறுதி உபதேசம் (வஸிய்யத்) ஒரு நிழல் போல நம்மைப் பின்தொடர்ந்தால், அவர் நமது இதயத்தில் நாற்காலி போட்டு ஆட்சி செய்கிறார். அவருக்குக் கட்டுப்படுவோம். நாமோ அவரையே அறியாத இருட்டில் இருந்தால் எப்படி நிழலை அறிவோம்? ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்த நூலில் இறுதி நபியின் உயிலை விவரிக்கிறார். அந்தச் சூழல், அந்த இடம், அந்த நேரம், அதன் தாக்கம், அதன் அரசியல் ஒவ்வொன்றையும் சமூக அக்கறையுடன் எழுதுகிறார்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288195301410,"sku":"KVT0033","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0033-1.webp?v=1732250972"},{"product_id":"islaamil-nabiththozhargalin-andhasthu","title":"Islaamil Nabiththozhargalin Andhasthu","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஓர் இறைத்தூதர், ஒரு வேதம், ஒரு சமுதாயம் இந்த மூன்றின் கூட்டுத் தாக்கத்தில் ஒரு புதிய உலகம் பிறந்ததை இஸ்லாமிய வரலாறு அல்ல, உலக வரலாறு ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்தப் புரட்சியை நபித்தோழர்களின் சமுதாயம் இறைத்தூதர் தலைமையில் சாத்தியப்படுத்தியது. அந்தத் தூதர் இறைவேதத்தின் வழிகாட்டலில் அதைச் சாத்தியப்படுத்தினார். இவ்வுலகத்தை மாற்றுவது எப்படி எனும் வினாவுக்கு முதலில் தங்களை மாற்றிக்கொண்ட செயல்வீரத்தின் முன்னுதாரண நாயகர்களாக விடை தருகிறார்கள் நபித்தோழர்கள். இங்கிருந்து தொடங்குகிறது அவர்களது உயர் அந்தஸ்தின் ஆதாரங்கள். சரியான கொள்கைப் பிடிப்பிலும் தடம் பிறழாத நபிவழிப் பாதையிலும் அவர்கள் சென்றதைப் போற்றிப் புகழ உலகம் முன்வருவதற்கு முன்பே இறைவேதங்களும் நபிமொழிகளும் முந்திச் சிறப்பித்துவிட்டன. தங்களை மெழுகுவர்த்தியாக உருக்கிக்கொண்ட அவர்கள் குளுமையான ஊற்றைப் பொங்கி வரச்செய்து அதன் மூலமே வெளிச்சத்தைப் பரப்பிவிட்டுள்ளார்கள். இதை ஷெய்க் ரபீஃ இப்னு ஹாதீ அல்மத்கலீ தமது விசாலக் கல்வியின் வாசலுக்குள் அழைத்து உபதேசிக்கிறார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288195334178,"sku":"KVT0034","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0034-1.webp?v=1732250976"},{"product_id":"islaamiya-arivai-theada-aaarvappadu-aringargal-sirappai-ari","title":"Islaamiya Arivai Theada Aaarvappadu! Aringargal Sirappai Ari!","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇஸ்லாமியக் கல்வி ஆர்வம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் சிறப்பை அறிவதிலிருந்து தூண்டப்படுகிறது. எப்படியெனில், அவர்கள் இஸ்லாமியக் கல்வியைப் பரப்புரை செய்து இஸ்லாமின்மீது ஆர்வத்தைக் கிளறுகிறார்கள். அதனால் இஸ்லாம் நமது இதயங்களின் பெரும் பரப்பைக் கவர்ந்துவிட, பின்னர் நாம் அறிஞர்களின் வழிகாட்டலில் நடைபோட விரும்புவோம். வாழ்வில் வழிதவறாத பாதுகாப்பு அம்சம் இந்தப் பந்தத்தில் இருக்கின்றது. நபித்தோழர்கள் நமது நபியின் சிறப்பை அறிந்து நபியின் மாணவர்களாக ஆனார்கள். அதற்கடுத்து நபித்தோழர்களின் சிறப்பை அறிந்து அவர்களின் மாணவர்களானார்கள் தாபிஊன். இதற்கடுத்து இவர்களின் சிறப்பறிந்து இவர்களுக்கு மாணவர்களானார்கள் தபஉ தாபிஈன். இப்படியே சங்கிலித் தொடரான பந்தத்தின் மூலம் நல்ல அறிஞர்களுடைய கல்வி ஓர் உம்மத்தைச் சீர்திருத்தி உருவாக்குகிறது. இதன் தேவையும் ஆர்வமும் மறுமை வரை தொடரும். ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலை இந்தக் கருப்பொருளுடன் வழங்கி நம்மை இஸ்லாமியக் கல்விச் சிறகுகளுடன் பறந்திட வழிகாட்டுகிறார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288196153378,"sku":"KVT0036","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0036-1.webp?v=1732250979"},{"product_id":"islaamiya-aanmigam","title":"Islaamiya Aanmigam","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇந்த உலகில் ஒவ்வொருவரின் ஆன்மாவிலும் சில கேள்விகள் எப்போதும் இருக்கும். அவற்றுக்குச் சரியான பதில்கள் கிடைத்தால்தான் ஆன்மத் திருப்தி அடைய முடியும். அவற்றில் முதன்மை கேள்வி இறைவனைப் பற்றியவை. இறைவன் உண்டா, இல்லையா? இறைவன் எங்கிருக்கிறான்? அவன் எப்படிப்பட்டவன்? அவனைப் பார்க்க முடியுமா? இப்படிப் பல. அடுத்த வகை, மரணத்தைச் சுற்றி எழக்கூடிய கேள்விகள். மரணம் என்பது என்ன? அதற்குப் பின் என்னவாகிறோம்? மறுவுலகம், மறுஜென்மம் என்பவை உண்டா? சொர்க்கம், நரகம் உண்டா? இப்படிப் பல. இவை மட்டுமின்றி, வேதம், இறைத்தூதர்கள், வணக்கவழிபாடுகள் என்று பல விசயங்களைப் பற்றியும் நமது ஆன்மாவுக்குள் கேள்விகள் எழுகின்றன. அனைத்திற்கும் இஸ்லாமிய விடைகளை வழங்குகின்ற கட்டுரைகளே இந்நூலில் உள்ளன. இவற்றை வாசிப்பவர் இஸ்லாமிய ஆன்மிகத்தின் உயிரோட்டத்தை, அதன் பிறப்பிடத்தை, ஒளியை அறிந்துகொள்ள முடியும்.\u003c\/h4\u003e","brand":"SOL","offers":[{"title":"Default Title","offer_id":43288196972578,"sku":"KVT0035","price":130.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0035-1.webp?v=1732250983"},{"product_id":"islaamiya-maarkkathil-samanilai-aththumeeraamal-alatchiyappaduthaamal","title":"Islaamiya Maarkkathil Samanilai - Aththumeeraamal Alatchiyappaduthaamal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇஸ்லாமிய மார்க்கம் சில செயல்களை நமக்கு அழகிய முறையில் சொல்லித் தருகிறது. ஆனால், சிலரிடம் ஷைத்தான் மிகைத்தன்மையையும், வரம்புமீறுதலையும், அதிகப்படுத்தலையும் நுழைத்துவிட்டான். அவ்விதமே வேறு சிலரிடம் குறைவு செய்தல், விரயம் மற்றும் மாசுபடுத்துதல் ஆகிய தன்மைகளைப் புகுத்தினான். இவையெல்லாம் ஷைத்தான் ஏற்படுத்திய ஊசலாட்டங்களாகும். மேலும், அவர்களுக்கு ஆசையூட்டி மயக்கியதன் விளைவாகும். மார்க்கத்தை உண்மையான முறையில் உள்ளபடியே செயல்படுத்த விடாமல் தடுப்பதே அவனது திட்டமாகும்.\n– ஷெய்க் ஜிப்ரீனின் வரிகள் சில.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288197005346,"sku":"KVT0037","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0037-1.webp?v=1732250985"},{"product_id":"islaamiya-oarirai-kolgai","title":"Islaamiya Oarirai Kolgai","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅகீதா எனும் சொல்லிலிருந்து ஆரம்பித்து, தவ்ஹீதின் ஒவ்வொரு அம்சத்தையும் அடுக்கடுக்கான ஆதாரங்கள் வழியாக எளிமையாய் விவரிக்கிறார் ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான். எதிர்வாதங்கள், தவறான விளக்கங்கள் அனைத்துக்கும் பதில்களைப் பதிவு செய்வதுடன் ஒவ்வொன்றையும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் படிக்கும் பாடங்களாக வகைப்படுத்தி விளக்குகிறார். பல மொழிகளில் இலட்சக்கணக்கானோர் விரும்பிப் படிக்கும் புத்தகம். சஊதியின் மேல்நிலை கல்விக்கூடங்களில் கட்டாயப் பாடநூல் இது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288197693474,"sku":"KVT0038","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0038-1.webp?v=1732250988"},{"product_id":"islaamiya-seerthiruththa-vazhikaatti-thani-manithar-muthal-samoogam-varai","title":"Islaamiya Seerthiruththa Vazhikaatti - Thani Manithar Muthal Samoogam Varai","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eநடக்கும்போது நாம் எடுத்துவைக்கின்ற அடுத்த அடி நம்மை வழுக்கித் தள்ளியே தீரும் எனத் தெரிந்தால் காலை அங்கு வைப்போமா? ஆனால், வாழ்க்கைப் பாதையில் நாம் பல விசயங்களில் கவனமில்லாமலே காலடி வைக்கிறோம். நேர்வழியின் தெளிவு இல்லாத அறியாமை. எனவே, விழுகிறோம்; பின்பு தப்பிக்க எழுகிறோம். அடுத்து இன்னொரு வழிகேட்டில் விழுகிறோம். சமயங்களில் அதன் பாதிப்புகளைக்கூட உணர முடியாத பித்துநிலையில் கிடந்துவிடுகிறோம். இது தனி மனிதர் முதல் சமூகம் வரை பாதிக்கின்றது. இந்நிலை தொடராமல் நம்மைப் பாதுகாக்க நமக்கான எளிய சீர்திருத்த வழிகாட்டி தேவையாகின்றது. ஷெய்க் முஹம்மது ஜமீல் ஸைனூ (ரஹ்) இந்நூலில் நமது பாதங்களை நேர்வழியின்மீது உறுதியாக்கும் முக்கியக் குறிப்புகளைக் குர்ஆன் நபிமொழியிலிருந்து தொகுத்தளிக்கிறார். கொள்கை சீர்திருத்தத்திலிருந்து தலைப்புகளைத் தொடங்கி வணக்க வழிபாடுகள், குடும்ப நலன், சமூக நலன், தனி மனித ஒழுக்கங்கள் என்று பல அம்சங்களில் நம்மையும் பிறரையும் சீர்திருத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். உலகின் பல மொழிகளில் வெளியாகி, பல இஸ்லாமியக் கல்விக்கூடங்களில் பாடங்களாக நடத்தப்படுகிற இந்நூல் இதன் சொல் முறையில் தனித்து விளங்குகிறது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288197857314,"sku":"KVT0039","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0039-1.webp?v=1732250990"},{"product_id":"islaamiya-vazhibaattu-sattam-vol-1","title":"Islaamiya Vazhibaattu Sattam Vol 1","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eவணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பது இஸ்லாம் நம்மிடம் வாங்குகின்ற உறுதிமொழி. ஒருவரை உண்மை இறைவனாகிய அல்லாஹ்வுடன் உள்ளத்தால் தொடர்புபடுத்துகின்ற அடித்தளம் இதுவே. அடுத்து இதன்மீது கட்டியெழுப்புகின்ற உயிரோட்டமான, உன்னதமான, புனிதமான வாழ்க்கைத் தூண்கள்தான் இஸ்லாமிய வழிபாடுகள். தண்ணீர், அதன் பாத்திரம், உடல், உடை, இடம் போன்றவற்றின் தூய்மையிலிருந்தே வழிபாடு தொடங்கிவிடுகிறது. கண்விழித்து பல் துலக்கி கழிவறைக் கடமைகளை முடிப்பதோடு, குளிப்பும் கடமையாகியிருந்தால் அதையும் நிறைவேற்றுவது நமக்கு வழிபாடு. இந்தப் புறத்தூய்மையின் வாசல் வழியே அகத்தூய்மைக்கான வழிபாட்டில் நுழைகிறோம். அதுதான் தொழுகை. இந்த வழிபாடு அல்லாஹ்வுடனான நேசத்தில் வாழ்க்கையைக் கட்டிப்போடுகிறது. இரட்சகன் விரும்புகிற வாழ்க்கையை வாழ நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. இதனால் நமது சம்பாத்தியம்கூட அவனுக்குப் பிடித்த முறையில் இருக்க தீர்மானம் கொள்கிறோம். இல்லையென்றால், நமது தானதர்மத்திற்கும் அவனிடம் நற்கூலி கிடைக்காது என்று தெரிந்துவைக்கிறோம். ஸகாத் வழிபாடு நமது ஒட்டுமொத்த பொருளாதார உழைப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. அதே சமயம், நமது உணவும் குடிப்பும் உடல் இச்சைகளும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. அதுதான் நோன்பு. தடையை மீறாத இறையச்சத்தின் ஆதார வழிபாடு இது. இப்படியான முஸ்லிம் வாழ்க்கையில் ஹஜ்ஜு வழிபாடு உச்சகட்டத்திற்கு அவரைக் கொண்டு செல்கிறது. நெஞ்சைப் பிழியும் இறைநெருக்கம் கொண்ட இந்த வாழ்க்கை முறைதான் இஸ்லாமிய வாழ்வியலின் இரத்த ஓட்டம். இதற்கான கல்விதான் ஒவ்வொரு மனிதனும் தேர்ச்சி பெற வேண்டிய அடிப்படைக் கல்வி. ஏனெனில், இது அன்றாட வாழ்வில் அனுதினமும் செயல்முறைக்கு அத்தியாவசிமானது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288197890082,"sku":"KVT0040","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0040-1.webp?v=1732250993"},{"product_id":"islamiya-kalvi-sayalpaadu-azhaippupani-mukkiyathuvamum-muthanmaiyum","title":"Islamiya Kalvi Sayalpaadu Azhaippupani - Mukkiyathuvamum Muthanmaiyum","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇஸ்லாமிய வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் செயல்படுத்துகிறோம். தொழுகையில் குறை வராத குறிக்கோள் சிலரிடம். துல்லியமாகக் கணக்கிட்டு ஸகாத் வழங்குகிற துரிதம் சிலரிடம். அநீதி என்றால் அடுத்த விநாடியே எதிர்க்குரல் கொடுக்கும் வீரம் சிலரிடம். இதில் எதுவாக இருப்பினும் தெளிவான அறிவில்லாமல் செய்தால் அனைத்தும் வீணே. சிறந்த தந்தையாக இருக்கும் சிலர், சிறந்த கணவராக இருப்பதில்லை. சிறந்த மனைவியாக இருக்கும் சிலர், சிறந்த அண்டை வீட்டாராக இருப்பதில்லை. சிறந்த உபதேசகராக இருக்கும் சிலர், சிறந்த பிள்ளையாக இருப்பதில்லை. இந்த முரண்பாடுகள் ஏன் உருவாகின்றன? எங்கே கோளாறு? ஒருவரின் இஸ்லாமியக் கல்விக்கும் செயலுக்கும் இடைவெளி ஏன்? தான் கற்றதைத் தன்னோடு நிறுத்திக்கொள்பவருக்கு எங்கு ஆபத்து காத்திருக்கிறது? இல்ம், அமல், தஅவா எனும் முக்கோண முஸ்லிம் வாழ்வியலில் எதை, எப்போது முதன்மைப்படுத்துவது? ஒவ்வொன்றுக்குமான முக்கியத்துவம் என்ன? ஒன்றோடு ஒன்று எப்படித் தொடர்புபட்டுள்ளன? – இந்தக் கல்வியில் தள்ளாடும் படகுகளாகத் தடுமாறும் நம்மை இழுத்துக் கட்டிச் சரியான திசையின் கோணத்தில் வழிகாட்கிறார் ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்தப் புத்தகத்தில்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288198709282,"sku":"KVT0041","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0041-1.webp?v=1732250995"},{"product_id":"ithuvae-yengal-azhaippu","title":"Ithuvae Yengal Azhaippu","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eமுஸ்லிம்களிடையே கடந்த காலத்தில் உருவாகிய பிரிவுகளால் காலங்காலமாக இருந்துவரும் கருத்துமோதல்களுக்கும், தற்காலத்தில் தோன்றியுள்ள பிணக்குகளுக்கும் ஒரே காரணமாக நான் நம்புவது, இவர்கள் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹைப் பின்பற்றுகிற மூன்றாவது விசயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதுதான்.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாக வாதிக்கிறார்கள். இவர்களின் பேச்சுகளைக் கேட்கும் இளைஞர்கள் குழம்பிப் போகிறார்கள். ‘சகோதரரே! இந்தக் கூட்டமும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது; அவர்களும் குர்ஆன், ஹதீஸையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள்..’ எனத் தடுமாறுகிறார்கள்.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eயார் சொல்வது உண்மை? எப்படி அதைத் தெளிவாகப் பிரித்தறிவது? இதற்குத்தான் குர்ஆன், நபிவழி, அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் வழிமுறை இருக்கிறது. ஒருவர் அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ் ஆகிய நபித்தோழர்களையும் அவர்களைப் பின்பற்றிய நல்லோர்களையும் பின்பற்றாமல், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றினால், நிச்சயமாக அவர் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றவேமாட்டார். மாறாக, தன் சுய அறிவையும் மனஇச்சையையுமே பின்பற்றுவார்.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003e– இமாமவர்களின் வரிகள் சில.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288198742050,"sku":"KVT0042","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0042-1.webp?v=1732250998"},{"product_id":"jinngalum-shaithaangalum-nammai-tharkaathu-kolvathu-yeappadi","title":"Jinngalum Shaithaangalum - Nammai Tharkaathu Kolvathu Yeappadi","description":"\u003ch4 style=\"text-align: justify\"\u003eஇந்தப் பூமியில் நாம் எத்தனையோ உயிரினங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜின்களும் அந்த உயிரினங்களில் ஒன்று. இதென்ன ஆடு, மாடு, காக்கை, குருவி, புழு பூச்சிகளைச் சொல்வதுபோல் சொல்கிறீர்களே எனக் கேட்கலாம். என்ன, ஜின் இனம் ஓர் உயிரினம் இல்லையா? கண்களுக்குத் தெரியாத உண்மைகளை எல்லாம் பொய்கள் என்பீர்களோ? பூமியில் நமக்கு முன்பே படைக்கப்பட்ட இனம் ஜின். நமது புலக் கண்களால் அவர்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், நம்மை அவர்கள் பார்க்கிறார்கள். நமது பிரதேசங்களில் பறக்கிறார்கள்; தங்கவும் செய்கிறார்கள். அவர்களுக்கும் நமக்குமான இந்த ஒரே உலகத்தில் அவர்களாலும் நம்மாலும் நிறைய காரியங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவர்களில் தீயவர்களைத்தான் ஷைத்தான்கள் என்கிறோம். அந்த ஷைத்தான்களின் தலைவன்தான் இப்லீஸ். அலாவுதீனின் அற்புத விளக்கினுள் பூதம் வெளிப்பட்ட பொய்க்கதை ஒரு ஜின் கதை. ஆனால், ஷெய்க் வஹீது அப்துஸ்ஸலாம் பாலீ எழுதியுள்ள இந்நூல் குர்ஆன் நபிமொழி அற்புத விளக்கின் ஒளியில் ஜின் இனத்தின் அமானுஷ்ய உண்மைக் கதையைச் சொல்வதோடு, ஜின் இனத்து ஷைத்தான்களின் தீங்குகளைவிட்டு நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதற்கும் வழிகாட்டுகின்றது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288199495714,"sku":"KVT0043","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0043-1.webp?v=1732251001"},{"product_id":"kadamai-illaa-ubari-vanakkangalin-sirappugal-kavanamilla-makkalukku-ninaivoottal","title":"Kadamai Illaa Ubari Vanakkangalin Sirappugal - Kavanamilla Makkalukku Ninaivoottal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eகடமையான வணக்கங்கள் விசயத்தில்கூட கவனமில்லாமல் வாழ்கின்ற காலத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நூல் உபரியான வணக்கங்களின் சிறப்புகளையும் செயல்முறைகளையும் பல்வேறு தலைப்புகளில் விவரிப்பதை வாசிக்கும்போது, ஒருபுறம் அந்த உபரி வணக்கங்களின்மீது நமக்கு ஆசை பிறப்பதோடு, மறுபுறம் எத்தனை கடமைகளில் நாம் தவறுசெய்து வருகிறோம் என்பதையும் நினைவூட்டுகின்றது. கடமைகளை அலட்சியம் செய்வது பெரும்பாவத்தில் தள்ளக்கூடியது; உபரிகளை அலட்சியம் செய்வது ஒருகட்டத்தில் கடமைகளையும் அலட்சியம் செய்கின்ற பெரும்பாவத்திற்கு இழுத்துச் செல்லக்கூடியது. இந்த உணர்வுதான் இந்நூலை வாசிக்கும்போது ஏற்படுகின்றது. ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஜாருல்லாஹ்வின் இந்த நூல் நமக்குள் கடமை மற்றும் உபரி வணக்கங்கள் இரண்டின் பக்கமும் கவனத்தைத் திருப்புகின்றன.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288199594018,"sku":"KVT0044","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0044-1.webp?v=1732251003"},{"product_id":"kanavugalin-vilakkam-kealvigalin-thaagaththai-thanikkum-neerodai","title":"Kanavugalin Vilakkam - Kealvigalin Thaagaththai Thanikkum Neerodai","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eகண்களை மூடினால் இருட்டு என்பார்கள். அதெல்லாம் இல்லை; கண்மூடித் தூங்கும்போதும் பட்டப்பகல் காட்சிகளைக் காணத்தானே செய்கிறோம்? கனவு காணும் கண்களின் பார்வைக்கு எத்தனையோ உலகங்கள் தென்படுகின்றனவே? கனவுலக அனுபவத்திற்கும் நமது நனவுலக வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா? உண்டு என்கிறது இஸ்லாம். கனவுகளுக்கென்று எந்த விளக்கமும் இல்லை என்ற மொக்கை வாதம் நாத்திக மூளையில் எழுந்த சீழ் கட்டி. இது அகற்றப்பட வேண்டும். கனவுகளை அகற்ற முடியாது. அவை தொடர்பான அறியாமை அகற்றப்பட வேண்டும். வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம்மை வழிநடத்துகிற இஸ்லாம், இதிலும் குழப்பங்களை விட்டு நம்மைக் காக்கின்றது. ஏனெனில், கனவின் பெயரால் ஷைத்தான் ஒரு மனிதனின் கொள்கையிலும் வாழ்க்கையிலும் இருட்டைப் போட்டுவிட முடியும். அதனால் கனவு விளக்கம் என்பது இஸ்லாமிய விளக்கமாக இருக்கும் வரை பாதுகாப்பானது. இதன் உளவியல் இஸ்லாமிய அறிஞர்களின் பெரும் கல்விக்கொடை. யார் இதன் மூலம் பயன்பெற விரும்புகிறாரோ, அவர் இந்தக் கல்வியின் அடிப்படைகளையும் ஒழுக்கங்களையும் பணிவுடன் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான தொடக்கநிலை வழிகாட்டிதான் ஷெய்க் அஹ்மது ஃபரீது எழுதியுள்ள இந்நூல்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288199626786,"sku":"KVT0045","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0045-1.webp?v=1732251006"},{"product_id":"kannippean-maryam-kumaarar-eesa-sarithiramum-sirappugalum-ulagappeangalil-unnathappean-fathima","title":"Kannippean Maryam, Kumaarar Eesa - Sarithiramum Sirappugalum | Ulagappeangalil Unnathappean Fathima","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஉலகப் பெண்களில் சிறந்தவர்களான மர்யம் (அலை) மற்றும் ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவரின் சரித்திரமும் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களின் சரித்திரமும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. மர்யமை அல்லாஹ் அவனது வேதத்தில் சிறப்பித்துப் பேசுகிறான். ஃபாத்திமாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள். இருவருமே பெண் இனத்தின் மிகச் சிறந்த முன்மாதிரிகள். உண்மையில், இதற்காகத்தான் இவர்களின் பெயர்களை நம்முடைய சமுதாயம் அதிகமதிமாகச் சூட்டியுள்ளது. ஆனால், இவர்களைப் போன்ற பரிசுத்த இறைநம்பிக்கையும் வாழ்க்கையும் நமக்குள் வருவதே மிக முக்கியமானது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288199659554,"sku":"KVT0046","price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0046-1.webp?v=1732251008"},{"product_id":"mannarai-veathanaigalum-sugangalum","title":"Mannarai Veathanaigalum Sugangalum","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eமண்ணறைதான் நமது இறுதிப் படுக்கை அறை. யார்தான் மறுப்போம்? ஆனால், மறப்போம். அந்தப் புதைகுழி எங்கோ யாருக்கோ தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மயானப் பகுதியின் வழியே கடந்துபோகும்போது வெட்டப்பட்ட ஒரு குழியை எட்டிப் பார்த்ததுண்டா? இறங்கிப் படுத்துப் பார்த்ததுண்டா? நம்மோடு கூடவே வந்து கொண்டிருக்கும் மரணத்துடன் தனிமையில் உண்மையாகவே படுத்திருக்கும் ஒரு ஸ்பரிசம் அப்போது பரவத் தொடங்கலாம். ஆனால், அந்தப் புதைகுழியினுள் மறைந்திருக்கும் உலகத்தை நமது பகுத்தறிவின் இருட்டில் கண்டுகொள்ள முடியாது. அதற்கு இறைச்செய்தியின் ஆதாரங்களில் வெளிப்படும் ஒளி நமது இதயங்களில் பாய வேண்டும். அப்போது தெரியும், நம் முன் விரியும் மண்ணறை உலகம் ஓர் ஆறடி அகலக் குழி அல்ல. அதையும் தாண்டி வேதனைகளும் சுகங்களும் ஒரு முன்னோட்டமாகச் சுற்றி வரும் மறுமையின் முதல்கட்ட உலகம் என்று. இதை ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா மரணச் சிந்தனையை வாழ்வியலாக்கும் கோணத்தில் இந்த நூலில் விவரிக்கிறார்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288200478754,"sku":"KVT0047","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0047-1.webp?v=1732251011"},{"product_id":"maruthuvamum-oathippaarthalum-aatharappoorvamaana-nabivazhiyil","title":"Maruthuvamum Oathippaarthalum - Aatharappoorvamaana Nabivazhiyil","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eநோயின் சோதனை நம்மை மருந்தின் பக்கம் திருப்புவதற்கு முன்னால் நம்மைப் படைத்தவனின் பக்கம் திருப்ப வேண்டும். ஏனெனில், அவன்தான் நோயையும் படைத்தவன். மருந்தையும் இறக்கியிருப்பவன். அவனது இரட்சிப்பின் நிவாரணப் பாதை ஒன்றைத் தேடி அடைந்து அவனையே சார்ந்து வாழ்கிற அனுபவம்தான் மருத்துவம். இதில் பிரார்த்தனையின் பங்கு ஒரு மருந்துக்கு உயிரை அளிப்பதாகவும், எந்த மருந்துமே கிடைக்கப் பெறாத ஒரு நோயாளிக்கு அதுவே மருந்தாகவும் அமைகின்றது. இஸ்லாம் நோயாளியை ஓர் எந்திரனாக (Robo) அணுகாமல், மனமும் உடலும் முயங்கி இயங்கும் உயிர்மைப் படைப்பாக அணுகி வழிகாட்டுகின்றது. எனவே, மருத்துவத்தை நெறிப்படுத்தும் ஆன்மிக உயிர்ப்பை அளித்து நோயாளியின் பலவீனத்தை அகற்றி ஆறுதல்படுத்துகிறது. இதனால் இங்கு மருத்துவரும் நோயாளியுமே இறை உதவியை வேண்டி நிற்கிறார்கள். பொறுமையும் சேவை உணர்வும் கருணையும் அவர்களை வழிநடத்துகின்றன. ஏகன் அல்லாஹ் மட்டுமே உண்மை இரட்சகனாக அவர்களுக்கு அறியப்படுகின்றான். ஷெய்க் காலிது அல்ஜுரைசீ இந்நூலில் நபிவழி பரிந்துரைத்த பல நிவாரண முறைகளைப் பட்டியலிடுகிறார். அதனுடன் ஓதிப்பார்த்தலின் நெறிமுறைகளையும் முன்வைக்கின்றார். நாத்திகத்தின் தாக்கத்திலிருந்து மருத்துவத்தையும் முஸ்லிம்களையும் ஒருசேர காப்பாற்ற வேண்டிய இக்காலத்தில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288200511522,"sku":"KVT0048","price":85.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0048-1.webp?v=1732251014"},{"product_id":"maseehu-dajjaal-kolaiyum-eesa-irangudhalum","title":"Maseehu Dajjaal Kolaiyum Eesa Irangudhalum","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eமறுமை நெருங்கிக்கொண்டே இருக்கின்றது என்பதை இம்மையின் குழப்பங்களும் கேடுகளும் நமக்குத் தொடர்ந்து நிறுவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றையே மறுமையின் அடையாளங்கள் என்கிறோம். நபியவர்கள் முன்னறிவித்த அனைத்தும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குழப்பங்களில் மாபெரும் குழப்பம் தஜ்ஜாலின் வருகையாகும். அவனைக் கொல்ல ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் மறுபடியும் பூமிக்கு இறக்குவான். இது சத்தியம். இதற்கான சான்றுகள் குர்ஆனிலும் நபிமொழியிலும் ஏராளம். ஆனால், இதை மறுப்பவர்களும் சந்தேகிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் திரிபுவாதங்களை முன்வைத்து எதிர்வாதம் செய்கிறார்கள். இதன் விளைவாக தஜ்ஜாலின் பெயரால் எழுகின்ற குழப்பம் அவன் வருவதற்கு முன்பே மிகப் பெரியதாக நமக்குத் தெரிகின்றது. ‘உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து அவனது குழப்பதைவிட மாபெரும் குழப்பம் வேறில்லை’ என்ற நபிமொழியின் எச்சரிக்கை இப்போதும் நினைவுக்கு வருகின்றது. அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் இவ்விசயத்தில் தெளிவான கொள்கையில் இருந்தார்கள். இமாம் அல்அல்பானீ (ரஹ்) இந்நூலில் அதற்கான நபிமொழிச் சான்றுகளைத் தொகுத்தளித்து ஓர் ஆய்வேடாக இதனை வழங்கியுள்ளார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288201330722,"sku":"KVT0049","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0049-1.webp?v=1732251017"},{"product_id":"moasakkaara-sooniyangalai-veezhththum-veecharuvaal","title":"Moasakkaara Sooniyangalai Veezhththum Veecharuvaal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003e‘பில்லி சூனியம் செய்வினையா? அப்படி ஒன்றுமே இல்லை; எல்லாம் கண்கட்டி வித்தைதான்’ எனக் கண்ணைக் கட்டிக்கொண்டு வாய் வித்தை காட்டுபவர்கள் எப்போதும் ஒரு கேள்வியிலிருந்தே தர்க்கத்தைத் தொடங்குகிறார்கள். ‘எங்கோ இருக்கும் ஒருவரை எந்தப் புறச்சாதனமும் இன்றி தாக்க முடியுமா?’ – சூனியத்தின் எதார்த்த நிலையை மறுக்க இதுதான் தர்க்கம் எனில், புறச்சாதனம் என்பதை முதலில் வரையறை செய்வோம். கல்லால் அடிக்கும்போது கல் ஒரு சாதனம். சொல்லால் அடிக்கும்போது சொல் ஒரு சாதனம். கல்லும் சொல்லும் ஒரே மாதிரியான புறச்சாதனங்களா? இல்லை என்பது பதிலானால், கண்களுக்குப் புலப்படுவது மட்டுமே புறச்சாதனம் என எப்படி வாதிக்க முடியும்? சூனிய விவகாரத்தில் ஜின் இன ஷைத்தான்தான் புறச்சாதனம். ‘ஜின்னைத்தான் வசப்படுத்த முடியாதே? ஒரு கல்லைக் கையாள்வதுபோல ஜின்னை ஏவ முடியுமா என்ன?’ – வசப்படுத்த முடியாதுதான்; ஆனால், ஏவுகிறவன் வசப்படலாமே? ஜின்னிடம் உதவி கோரி பிரார்த்தனைச் சடங்குகள் செய்கின்ற சூனியக்காரனின் நிலை என்ன? ஷைத்தானிடம் அவன் வசப்பட்டவன்தானே? இருவரின் நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இது புரிந்துணர்வு பந்தம். எறியப்பட்ட கல்லும் எய்யப்பட்ட அம்பும் அல்லாஹ் நாடினால் எதிரியைத் தாக்குவது போல சூனியமும் அல்லாஹ் நாடினால் தாக்கும்; அதே சமயம், அல்லாஹ்வின் வேத நிவாரணம் அதன் பாதிப்பை நீக்கும். ‘முடிச்சுகளில் ஊதும் சூனியக்காரப் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்’ (113:4) என்று பிரார்த்திக்கிற எந்த முஸ்லிமாயினும் சூனியக்காரியின் முடிச்சுகளால் பாதிப்பு உண்டு என ஒப்புக்கொள்கிறார். ஷெய்க் வஹீது அப்துஸ்ஸலாம் பாலீ இந்நூலில் ஜின் ஷைத்தான்களின் தீண்டல், சூனியத்தின் வகைகள், அவற்றின் பாதிப்புகள், அறிகுறிகள், நபிவழி நிவாரணங்கள், சிகிச்சை அனுபவங்கள் எனப் பல கல்விகளைப் பகிர்கிறார்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288201363490,"sku":"KVT0050","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0050-1.webp?v=1732251019"},{"product_id":"muslim-samoogathi-nabigalaar-marana-thukkathin-thaakangal","title":"Muslim Samoogathi Nabigalaar Marana Thukkathin Thaakangal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஒரு துக்கம் தொண்டையை அடைக்கும்போது பேச்சு வருவதில்லை. ஆனால், கண்ணீர் வெளியே வருகிறது. இமைகள் நனைந்த ஈரத்தைக் கடும் வெயிலும் உலர்த்திவிட முடியாது. காரணம், அது இதயத்தின் துக்கம் உறைந்த குளிரில் நடுங்கித் தவித்துக்கொண்டிருக்கும். அந்த ஈரக் கண்ணீர் ஒரு பிரியமானவரின் மரணத்தால் அதிர்ச்சியுடன் வலி மிகுந்து வெளியேறும்போது பலர் மார்பில் அடித்துக் கொண்டு அதை வலி நிவாரணி என்று நினைக்கிறார்கள். தரையிலோ சுவரிலோ தலையை முட்டி ஒப்பாரிக் கூச்சலிட்டு இறைவனையே திட்டித் தீர்த்து ஓய்ந்து துவண்டு விழுகிறார்கள். கலகம் செய்பவர்களும் உண்டு. இவையெல்லாம் மரணித்தவரின் அந்தஸ்தைப் பொறுத்து அளவிடப்படுவது.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஉயிர் பிரிந்து நம்மைவிட்டுப் போனவர்கள் ஒரு முட்டை ஓட்டின் சில்லுகள்போல நம்மை இங்குச் சிதறவிட்டு நம்மிலிருந்து உடைத்து வெளியேறிப் பறந்துவிடுகிறார்கள். நபிகளாரை இழந்த மரணப் பிரிவு இந்த சமூகத்தையே நொறுங்கிய முட்டை ஓட்டுச் சில்லுகளாகத் தாக்கம் செலுத்துகிறது. ஆனால், அது அழிவின் அடையாளம் அல்ல. நமது உடலும் உயிரும் யாருடன் உலவி வலம் வந்து உண்டு சிரித்து அழுது உறவாடிச் சுவாசித்தனவோ, அந்தத் தாய் தந்தை, சொந்தங்கள், நட்புகள், சொத்துகள் அனைத்தையும்விட, நமது உயிரைவிட நபிகளாரின் அந்தஸ்து நமக்குள் அளவின் எல்லையைத் தாண்டிய ஒன்றல்லவா? ஆகவேதான், அவர்களின் மரணத் துக்கத்தை நேரில் அனுபவித்த நபித்தோழர்களிடம்கூட அது நபிக்கு மாறுசெய்கின்ற போக்கில் வெளிப்படவில்லை. ஏன், இன்றும் ஒரு முஸ்லிம் இழவு வீடு முற்றிலும் மாறுபட்ட துக்கத்தின் தாக்கத்தை முன்வைக்கின்றது. ஒப்பாரி இல்லை. இறைநிராகரிப்புக் கூச்சல் இல்லை. நபியின் தாக்கம் துக்கத்திலும் தாக்கம் செலுத்துகிறதெனில், அவரை இழந்த துக்கத்தின் தாக்கம் எப்படியெல்லாம் நமக்குள் வினையூக்கியாக வேலை செய்யவேண்டும்? இதை ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷாவின் துயர உபதேசங்களுடன் வாசிக்கும்போது அது நம்மை புதிய முஸ்லிமாக உயிர்ப்பிக்கிறது.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288202182690,"sku":"KVT0051","price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0051-1.webp?v=1732251022"},{"product_id":"muslimai-kaafir-yeanbatha-takfeer-kuriththa-sattangal","title":"Muslimai Kaafir Yeanbatha - Takfeer Kuriththa Sattangal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eவாய்க்கு வந்தபடி எதையும் பேசிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் பூராவும் இருக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு சொல்லும் விசாரணைக்கு உட்பட்டவையே. இதில் ஒரு முஸ்லிமைக் காஃபிர் என்று வசை பாடுவது கொடிய அவதூறு. அவரை இஸ்லாமியப் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே தள்ளிச் சாய்த்துக் கொல்லுவதற்குத் துணிகின்ற அக்கிரமம். வாய்க்கு வந்தபடி அல்ல, மனஇச்சைக்கு வசதிப்படி தீர்ப்பளிக்கின்ற இந்தக் கொள்கைக் குழப்பம்தான் நமது கலீஃபாக்களில் உஸ்மானையும் அலீயையும் கொலை செய்தது. நேர்வழி சென்ற கலீஃபாக்களையே இதனால் இழந்தோமெனில், மற்றவர்கள் எம்மாத்திரம்?\nஆனால் ஒரு சிரிப்பான முரண் என்னவெனில், இன்று இந்தச் சிந்தனையின் பாதிப்புக்கு ஆளானவர்கள் சிலர், பிற மதத்தவர்களைக்கூட காஃபிர்கள் என்று உடனே சொல்லிவிடக் கூடாது என்பவர்கள். இஸ்லாமிய அழைப்பு தரப்பட்டு, அதைக் காதுகொடுத்துக் கேட்டு, பின்பும் நிராகரிக்கக்கூடியவர்கள் மட்டும்தான் காஃபிர்களாம். அப்படியானால் பிற மதத்தவர்களுக்கு என்ன பெயர் என்று கேட்டால், முஸ்லிம் அல்லாதவர்கள் எனச் சொல்ல வேண்டுமாம். என்ன ஒரு வினோதம்! இந்த அளவு இறங்கிவந்து நூதனச் சிந்தனை விதியை மார்க்கத்தில் புகுத்தியவர்கள்கூட, ஒரு முஸ்லிமை மட்டும் காஃபிர் என்று துணிந்து உதறிப் பேசுவதில் உதறல் அடைவதில்லை. இது கொள்கை சார்ந்த நுட்பமான சட்டவிதிகளை அறியாத மடமையின் அழிச்சாட்டியம். இதில் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் மிகத் தெளிவான நெறிமுறையை வகுத்திருக்கிறார்கள். இதன் எளிமையான தொடக்கநிலை விவரிப்புதான் ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் எழுதியுள்ள இந்நூல்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288208834594,"sku":"KVT0052","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0052-1.webp?v=1732251067"},{"product_id":"muslimgal-anaivarukkum-mukkiya-paadangal","title":"Muslimgal Anaivarukkum Mukkiya Paadangal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇந்த விநாடியில் இப்போது முஸ்லிமானவர் என்றாலும், அல்லது இஸ்லாமிய உலகின் பிரபல மேதை என்றாலும், அனைவருக்குமே முக்கியமானவை சில எப்போதும் உண்டு. சொர்க்கத்தில் படித்தரங்கள் இருப்பதால், அவரவரின் தகுதிக்கேற்ப நுழைவோம். ஆனால், சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவாக முக்கியம்தானே? அந்த அடிப்படையில் திருக்குர்ஆனில் நாம் முதலில் மனனம் செய்து புரிந்திருக்க வேண்டிய சின்ன அத்தியாயங்களின் பட்டியல், அவற்றின் சுருக்கமான விளக்கம், இஸ்லாம் ஈமான் இஹ்ஸான் முதலியவற்றின் அடிப்படைகள், ஏகத்துவத்திற்கும் இணைவைப்புக்கும் இடையிலான வேறுபாடுகள், வுளூ தொழுகை சட்டங்கள், நற்குணங்களைத் தூண்டுதல், பாவங்களை எச்சரித்தல், இறப்பின் இறுதிச் சடங்குகள் போன்றவற்றை ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) இந்நூலில் கவனப்படுத்துகிறார்கள். சிறுவர், பெரியோர், ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி அனைவருக்குமான கடமையான கல்வியை இந்த நூலில் விளக்கக்குறிப்புகளுடன் அறிந்துகொள்ளலாம்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288209653794,"sku":"KVT0053","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0053-1.webp?v=1732251070"},{"product_id":"naangu-vaarthaigalin-sirappugal-al-hawqala","title":"Naangu Vaarthaigalin Sirappugal | Al Hawqala","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஅல்லாஹ் நான்கு வார்த்தைகளுக்கு மிக மேலான சிறப்புக்களையும் அவற்றின் மேன்மையை அறிவிக்கின்ற அம்சங்களையும் ஏற்படுத்தியுள்ளான். அந்த வார்த்தைகளுக்கு அவன் கொடுத்துள்ள மகிமையும் உயர்ந்த படித்தரமும் மற்ற வார்த்தைகளைவிட அவற்றுக்குத் தனித்தன்மைகளை வழங்கியுள்ளது. அந்நான்கு வார்த்தைகள் இவையே: ஸுப்ஹானல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர். இந்த வார்த்தைகளின் சிறப்புகள் குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை ஓதிவருவதின் நன்மைகளும், இம்மை மற்றும் மறுமையின் தொடர்ச்சியான நற்பேறுகளும் நபிமொழிகளில் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. இத்தொகுப்பில் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் குறித்த விளக்க நூலும் இணைக்கப்பட்டுள்ளது. ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர் அவர்களின் இந்த இரண்டு நூல்களும் நமது வழிபாடுகளை அர்த்தமுள்ளதாய் நாம் ஆக்கிக்கொள்ள மிகவும் உதவுகின்றன.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288209686562,"sku":"KVT0054","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0054-1.webp?v=1732251073"},{"product_id":"nalla-manaiviyin-panbunalangal","title":"Nalla Manaiviyin Panbunalangal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eநல்ல மனைவியால் நல்ல குடும்பம் உருவாகின்றது. கெட்ட கணவனைக்கூடச் சீர்திருத்தும் ஆற்றல் அவளிடம் உண்டு. ஆனால், இதற்கு நல்ல வழிகாட்டல் தேவை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியபடி இஸ்லாமியக் கல்வியுடனும் இறையச்சத்துடனும் அவள் வாழத் தொடங்க வேண்டும். ஒரு பெண் நல்லவளாக, பத்தினித்தனமுள்ளவளாக, நேர்மையானவளாக, அல்லாஹ்வை வணங்குபவளாக ஆக வேண்டுமெனில் தீமையின் அனைத்து வாயில்களையும் விட்டு ஒதுங்கி, குழப்பமான அனைத்து சிந்தனைகளைவிட்டும் அவள் தன்னை காத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பொறுப்புக் கொடுத்துள்ளதின்படி பெண் என்பவள் பெரும் பொறுப்புதாரியாவாள். அது உயர்வான முறையில் கவனம் எடுத்துக்கொள்ளத்தக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288210505762,"sku":"KVT0055","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0055-1.webp?v=1732251075"},{"product_id":"nanmaigalin-vangiyil-muthaleedu-oru-vazhikaatti","title":"Nanmaigalin Vangiyil Muthaleedu - Oru Vazhikaatti","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eபொதுவாக மனிதர்கள் தங்களுக்கு ஒன்றில் இலாபம் இருக்குமெனத் தெரிந்தால், வியாபாரக் கணக்குப் போட்டு அந்த இலாபத்தை அடைய முயற்சி செய்வார்கள். முதலீட்டையும் இலாபத்தையும் கவனித்து வருவார்கள். இலாபம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டையும் அதிகரிப்பார்கள். அதற்காகத் தங்கள் வருமானத்தில் சேமிப்பையும் உருவாக்குவார்கள். இந்த நூலில் ஒரு வித்தியாசம், நற்செயல்களை முதலீடு செய்வதால் கிடைக்கின்ற இலாபங்களின் கணக்கு சொல்லப்பட்டுள்ளன. நம்முடைய நன்மைகளின் வங்கியில் அவற்றைச் சேமிப்பதின் மூலம் என்றுமே இழப்பில்லாத ஒரு வியாபாரத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது. இந்த வியாபாரம் நம்மை அல்லாஹ்வின் திருப்திக்காக நம்மையே விற்றுவிடுவதாகும். இதனை வாசிப்பவருக்கு அந்த நற்செயல்களின்மீது ஆசை பிறக்கக்கூடும்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288210538530,"sku":"KVT0056","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0056-1.webp?v=1732251078"}],"url":"https:\/\/darussalam.in\/collections\/tamil-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d.oembed?page=9","provider":"Darussalam India","version":"1.0","type":"link"}